பொது செய்தி

தமிழ்நாடு

ஒரே நாளில் கட்டுமான திட்ட அனுமதி சாத்தியமா?

Updated : செப் 10, 2021 | Added : செப் 10, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
சென்னை- ஆந்திரா, தெலுங்கானா போல, ஒரே நாளில் கட்டு மான திட்ட அனுமதி வழங்கும் திட்டத்தை, தமிழகத்தில் செயல்படுத்துவது குறித்து, வீட்டுவசதித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.தமிழகத்தில், நகர், ஊரமைப்பு சட்டப்படி, பொது கட்டட விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., - நகர், ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி., மற்றும்

சென்னை- ஆந்திரா, தெலுங்கானா போல, ஒரே நாளில் கட்டு மான திட்ட அனுமதி வழங்கும் திட்டத்தை, தமிழகத்தில் செயல்படுத்துவது குறித்து, வீட்டுவசதித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.



latest tamil news


தமிழகத்தில், நகர், ஊரமைப்பு சட்டப்படி, பொது கட்டட விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., - நகர், ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி., மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் கட்டுமான திட்ட அனுமதி வழங்கி வருகின்றன.எதிர்பார்ப்புஇதில் விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் கட்டுமான திட்ட அனுமதி வழங்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆட்சிக் காலத்தில் 45 நாட்களுக்குள் திட்ட அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதற்கான நடவடிக்கைகள் இன்னும் முழுமை பெறாமல் உள்ளன.இந்நிலையில், தற்போது பொறுப்புக்கு வந்துள்ள புதிய அமைச்சர் மற்றும் அதிகாரிகள், 60 நாட்களில் கட்டட அனுமதி கோப்புகளை முடிக்க உத்தரவிட்டுள்ளனர்.இருப்பினும், சென்னை மாநகராட்சி உள்ளிட்ட பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளில், 30 நாட்களில் கட்டுமான திட்ட அனுமதி கோப்புகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் விரைவில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கட்டுமான திட்ட அனுமதி வழங்குவதில், சமீபத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன.

இதன்படி, விண்ணப்பங்கள் 'ஆன்லைன்' முறையில் பதிவான நாளிலேயே, உரிமம் பெற்ற வல்லுனர்கள் ஆய்வு செய்து, முதற்கட்ட கட்டட அனுமதி ஆணையை வழங்கி விடுவர். இதை பயன்படுத்தி விண்ணப்பதாரர்கள் கட்டுமான பணிகளை துவங்கலாம்; வீடு விற்பனையில் இறங்கலாம். அதன்பின், விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்ட கோப்புகள், நகரமைப்பு அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டு, இறுதி ஒப்புதல் குறித்து முடிவு எடுக்கப்படுகிறது.அதிகாரப்பூர்வ அறிவிப்புஇதுகுறித்து, வீட்டுவசதி நகர்ப்புற வளர்ச்சி துறை கூறியதாவது:சி.எம்.டி.ஏ., உயரதிகாரிகள் குழு, சமீபத்தில் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கு சென்று, இந்த நடைமுறையை ஆய்வு செய்து வந்தது.


latest tamil news


அவர்களின் பரிந்துரை அடிப்படையில், இங்கு எப்படி செயல்படுத்தலாம் என்பதற்கான நடைமுறைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.புனேயைச் சேர்ந்த தனியார் நிறுவனம் வாயிலாக, கட்டுமான திட்ட அனுமதி பணிகளை ஒரே இணையதளத்தில் ஒருங்கிணைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.இதில், புதிய நடைமுறையை புகுத்தி, ஒரே நாளில் திட்ட அனுமதி வழங்குவதற்கான வழிமுறைகளை அதிகாரிகள் உருவாக்கி வருகின்றனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-செப்-202107:32:36 IST Report Abuse
Venkat Sadagopan பெரிய கட்டிடங்களையே ஒரே நாளில் கட்டி முடிக்கும் திறமை பெற்ற மனிதற்கு அனுமதி வழங்குவதில் சிரமம் இருக்குமா?
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
10-செப்-202111:21:51 IST Report Abuse
duruvasar ஓய்வுபெற்ற நீதியரசர் தலைமையில் விரைவில் ஒரு வல்லுனர் குழுவை அமைச்சிட்டா போகுது. கவிப்பேரரசு அவர்களை இனியும் பட்டினி போடுவது அழகல்ல. ஒன்றிணைந்த திமுக அறிவாளிகளின் கூடாரம் என்றால் மிகையாகாது.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
10-செப்-202107:59:35 IST Report Abuse
RajanRajan ஒரே நாளில் கட்டுமான திட்ட அனுமதி சாத்தியமா? ஏன் முடியாது? எல்லாம் நீங்க கொடுக்கிற லஞ்ச தொகையை பொறுத்து தான் மருவாதை பங்களிப்பு. அனுமதிக்கு ஒரு கோடி விடுங்க ஒரு மணி நேரத்துல அனுமதி பத்திரத்தோட உங்க வுட்டு வாசலிலே காவல் கிடைப்பானுங்க கும்மியடிக்க. திராவிடம் என்றாலே லஞ்ச ஊழல் ஓன்று தான் வரலாறு படைச்சவனுங்களாச்சே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X