பொது செய்தி

தமிழ்நாடு

வினை தீர்ப்பவனுக்கு இன்று விழா! பூ, பூஜைப் பொருட்கள் விலை உயர்வு

Added : செப் 10, 2021
Share
Advertisement
கோவை;விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பூ, அருகம்புல் உள்ளிட்ட பூஜைப் பொருட்களின் விலை கனிசமான அளவு உயர்ந்தது.நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அரசு தடை விதித்துள்ளது. இதற்கு பல இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.இது ஒரு புறம் இருக்க, பொதுமக்கள் விநாயகர் சதுர்த்தியை விமர்சையாக
 வினை தீர்ப்பவனுக்கு இன்று விழா! பூ, பூஜைப் பொருட்கள் விலை உயர்வு

கோவை;விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பூ, அருகம்புல் உள்ளிட்ட பூஜைப் பொருட்களின் விலை கனிசமான அளவு உயர்ந்தது.நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அரசு தடை விதித்துள்ளது. இதற்கு பல இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.இது ஒரு புறம் இருக்க, பொதுமக்கள் விநாயகர் சதுர்த்தியை விமர்சையாக கொண்டாட தயாராகி விட்டனர். இதனால், நேற்று மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.பொதுமக்கள் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட, களிமண்ணாலான விநாயகர் சிலைகளை வாங்கிச் சென்றனர். இதுதவிர, கோவில்களில் வைத்து வழிபடவும் பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் எடுத்துச் செல்லப்பட்டன.கோவை பூமார்கெட்டில், நேற்று பூக்கள் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகம் இருந்தது. இன்று விநாயகர் சதுர்த்தி மற்றும் முகூர்த்த நாள் என்பதால், பூக்களின் விலை உயர்ந்தது.மல்லிகை கிலோ, ரூ.1,200, முல்லை, ரூ.800, ஜாதிப்பூ, ரூ.600, சம்பங்கி, ரூ.400, கோழிக்கொண்டை, ரூ.100, ரோஜா, ரூ.400, வைலட் செவ்வந்தி, ரூ.160, மஞ்சள் செவ்வந்தி, ரூ.80 - 120, அரளி, ரூ.240, வாடாமல்லி, ரூ.60, தாமரை, ரூ.20, மரிக்கொழுந்து, ரூ.50 என் விற்பனை செய்யப்பட்டது.இதுதவிர, மாவிலை, ரூ.20, அருகம்புல், ரூ.20, விநாயகர் குடை, ரூ.50, வெள்ளை அருகம்பூ, ரூ.20 என, அனைத்து பூஜை பொருட்களின் விலையும் உயர்ந்து இருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X