பொது செய்தி

தமிழ்நாடு

ஆதிமுதல்வனே விநாயகனே...!

Added : செப் 10, 2021
Share
Advertisement
தெய்வங்களின் முதல் தெய்வமாக இந்துக்கள், விநாயகரை வணங்குகின்றனர். சுப நிகழ்வுகளுக்கெல்லாம் முதன்மையாக மஞ்சளில் சில சொட்டு தண்ணீரை கொண்டு நனைத்து, விநாயகரை கைகளிலேயே சில நிமிடத்தில் உருவாக்கி, அதில் குங்கும திலகமிட்டு, மலர் சூட்டி வழிபட்டு நிகழ்ச்சியை துவக்குவது இன்றும் நடைமுறையில் உள்ளது.விநாயகர் சதுர்த்தி என்பது விநாயகரின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது.
 ஆதிமுதல்வனே விநாயகனே...!

தெய்வங்களின் முதல் தெய்வமாக இந்துக்கள், விநாயகரை வணங்குகின்றனர். சுப நிகழ்வுகளுக்கெல்லாம் முதன்மையாக மஞ்சளில் சில சொட்டு தண்ணீரை கொண்டு நனைத்து, விநாயகரை கைகளிலேயே சில நிமிடத்தில் உருவாக்கி, அதில் குங்கும திலகமிட்டு, மலர் சூட்டி வழிபட்டு நிகழ்ச்சியை துவக்குவது இன்றும் நடைமுறையில் உள்ளது.விநாயகர் சதுர்த்தி என்பது விநாயகரின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது. இந்துக்களின் முக்கிய விழா. ஆண்டுதோறும் ஆவணி மாதம் வளர்பிறைச் சதுர்த்தி நாளில் கொண்டாடப்படுகிறது.மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜியின் ஆட்சியில் விமரிசையாக கொண்டாடப்பட்டது. நம் நாட்டின் தேசிய விழாவாகவும், பாரம்பரிய கலாசார விழாவாகவும் கொண்டாடப்படுகிறது.தமிழகத்தை ஆண்ட மன்னர்களும் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடியதாக வரலாறு ஆதாரங்கள் சொல்கின்றன. தற்போதும் இவ்விழா தமிழகத்தில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.நகரம், கிராமம் என்ற பாகுபாடுகளை மறந்து மக்கள் ஐந்து, ஏழு மற்றும் ஒன்பது நாள் திருவிழாவாக கொண்டாடுகின்றனர்.விழாவுக்காக, ஊரெங்கும் பந்தல்கள் அமைக்கப்பட்டு களிமண் மற்றும் பேப்பர் கூழால் தயாரிக்கப்பட்டு, ரசாயனமில்லா நிறமிகளை பயன்படுத்தி விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்கின்றனர். இவை மூன்றரை அடியில் இருந்து 15 அடி உயரம் வரை, விதவிதமாக பல வண்ணங்களில் உருவாக்கப்படுகின்றன.சதுர்த்திநாளில் பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகள், மலர் மாலைகளால் அலங்கரிக்கப்படுவதோடு, சிவாச்சாரியார்களை கொண்டு சிறப்பு வேள்விகள் நடத்தப்படுகின்றன. தேங்காய், அவல், மோதகம், கொழுக்கட்டை, சுண்டல், பொரி, பழங்கள் ஆகியவை விநாயகருக்கு சதுர்த்தி நாளில் படைக்கப்படுகின்றன.முதல் நாளில் துவங்கி தொடர்ந்து ஐந்து, ஏழு, ஒன்பது நாட்களில் விநாயகர் சிலைகள்அருகே உள்ள நீர்நிலைகளில் விசர்ஜனம் செய்யப்படுகின்றன.கோவையில் இந்து அமைப்புகளும், குடியிருப்போர் சங்கங்களும் ஆண்டுதோறும் விழாவை விமரிசையாக கொண்டாடி மகிழ்கின்றனர். இதன் வாயிலாக இந்துக்களின் கலாசாரம் பறைசாற்றப்படுகிறது.இன்று விநாயகர் சதுர்த்தி விழா!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X