பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளிகளில் 50 நாட்கள் புத்தாக்க கல்வித்துறை உத்தரவு

Added : செப் 10, 2021
Share
Advertisement
கோவை;ஆன்லைன் வகுப்பில் பங்கேற்காத, சிறப்பு கவனம் தேவைப்படும் மாணவர்களுக்கு, 50 நாட்கள் வரை, முந்தைய ஆண்டு பாடங்களின் அடிப்படை கருத்துகளை, கற்பிக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, நேரடி வகுப்புகள் நடக்கின்றன. ஜூன் மாதத்தில் இருந்து, கல்வி தொலைக்காட்சி, ஆன்லைன் மூலமாக மட்டுமே பாடங்கள் கையாளப்பட்டன.கடந்தாண்டும்

கோவை;ஆன்லைன் வகுப்பில் பங்கேற்காத, சிறப்பு கவனம் தேவைப்படும் மாணவர்களுக்கு, 50 நாட்கள் வரை, முந்தைய ஆண்டு பாடங்களின் அடிப்படை கருத்துகளை, கற்பிக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, நேரடி வகுப்புகள் நடக்கின்றன. ஜூன் மாதத்தில் இருந்து, கல்வி தொலைக்காட்சி, ஆன்லைன் மூலமாக மட்டுமே பாடங்கள் கையாளப்பட்டன.கடந்தாண்டும் இதே நிலை தொடர்ந்ததால், மாணவர்களின் கற்றல் திறன் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது. இதை ஈடுகட்ட, முந்தைய ஆண்டு பாடத்திட்டங்களின் முக்கிய கருத்துகளும், நடப்பு கல்வியாண்டில் இப்பாடங்களுக்கான தொடர்பு குறித்தும், பள்ளிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, முதற்கட்டமாக இப்பயிற்சியை கற்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.கடந்தாண்டும், நடப்பாண்டில் பள்ளி திறக்காத வரை, ஆன்லைன் வகுப்பில் முறையாக பங்கேற்ற மாணவர்களுக்கு, புத்தாக்க பயிற்சி காலத்தை அந்தந்த பள்ளிகளே முடிவெடுத்து கொள்ளலாம். ஆன்லைன் வகுப்பில் பங்கேற்காத, சிறப்பு கவனம் தேவைப்படும் மாணவர்களுக்கு, 50 நாட்கள் வரை, பயிற்சி அளிக்க வேண்டும்.இதை முறையாக பின்பற்றுவதை, அதிகாரிகள் ஆய்வின் மூலம், உறுதி செய்ய வேண்டுமென, கமிஷனர் நந்தகுமார், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதாவிடம் கேட்டபோது,''இரண்டாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, தயாரிக்கப்பட்ட பயிற்சி அந்தந்த பள்ளிக்கு அனுப்பப்பட்டு, வகுப்பு நேரத்தில் சொல்லி தரப்படுகிறது. நேரடி வகுப்புகள் நடந்தாலும், பள்ளி வர முடியாத மாணவர்களுக்கு, ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடத்துமாறும், ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X