பொது செய்தி

தமிழ்நாடு

'பசிக்கும்ல... சாப்டணும்ல'

Added : செப் 10, 2021
Share
Advertisement
திருப்பூர்:ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தில், இரண்டு முதல், ஐந்து வயது வரையுள்ள குழந்தைகளுக்கு, ஊட்டச்சத்து உணவு வழங்கப்படுகிறது. அமைப்பாளர் மூலம், அடிப்படை கல்வியும் போதிக்கப்படுகிறது.ஊரடங்கு காரணமாக, பல மாதங்களாக அங்கன்வாடி மையங்கள் திறக்கப்படவில்லை. குழந்தைகளுக்கான உணவு தயாரித்து வழங்க, உணவு பொருட்கள் வீடுகளில் வழங்கப்பட்டது. கடந்த ஒரு வாரமாக,
 'பசிக்கும்ல... சாப்டணும்ல'

திருப்பூர்:ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தில், இரண்டு முதல், ஐந்து வயது வரையுள்ள குழந்தைகளுக்கு, ஊட்டச்சத்து உணவு வழங்கப்படுகிறது. அமைப்பாளர் மூலம், அடிப்படை கல்வியும் போதிக்கப்படுகிறது.ஊரடங்கு காரணமாக, பல மாதங்களாக அங்கன்வாடி மையங்கள் திறக்கப்படவில்லை. குழந்தைகளுக்கான உணவு தயாரித்து வழங்க, உணவு பொருட்கள் வீடுகளில் வழங்கப்பட்டது. கடந்த ஒரு வாரமாக, அங்கன்வாடி மையங்களில், உணவு தயாரித்து வழங்கப்படுகிறது.தக்காளி சாதம், பருப்பு சாதம், புலாவ், எலுமிச்சை சாதம், கொண்டை கடலை, முட்டை, பச்சை பயறு, உருளை கிழங்கு ஆகியவை உணவாக வழங்கப்படுகிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு, அங்கன்வாடி மையங்கள் திறக்கப்பட்டு, மதிய உணவு மட்டும் வழங்கப்படுகிறது. வீடுகளில் அடைந்து கிடந்த குழந்தைகள், மீண்டும் மையத்துக்கு வந்து செல்வதாலும், நண்பர்களை சந்தித்ததாலும், உற்சாகத்துடன் காணப்படுகின்றனர்.ஒருங்கிணைந்த குழந்தைகள் நலத்திட்ட அலுவலர் (திருப்பூர் நகரம்) ஜெயலதா கூறுகையில்,''பெற்றோருடன் வரும் குழந்தைகள், உணவு சாப்பிட்டதும், திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றனர். கூட்டம் சேராமல், சமூக இடைவெளியுடன் அமர வைத்து, சாப்பிட செய்கிறோம். ஞாயிற்றுக்கிழமை உணவு தயாரித்து வழங்க, 80 கிராம் அரிசியும், 10 கிராம் பருப்பும் வழங்கப்படுகிறது,'' என்றார்.வைரலான வீடியோகடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு, 'சங்கம் முக்கியமா... சாப்பாடு முக்கியமா' என்று, ஒரு சிறுவனை பார்த்து கேட்கும்போது, 'சாப்பாடுதான் முக்கியம்; பசிக்கும்ல... சாப்டணும்ல' என்ற வீடியோ வெளியாகி வைரலானது; தற்போது குட்டீஸ் 'சங்கமாக' கூடும் தங்கள் சக நண்பர்களையும் பார்க்க முடிவதோடு, உணவையும் அவர்களுடன் இணைந்து சாப்பிட முடிகிறது.----திருப்பூர் நொய்யல் வீதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில், குழந்தைகளுக்கு மதிய உணவு பரிமாறப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X