பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பஸ்கள் இயக்கம் சுறுசுறுப்பு! பயணிகள் அதிகரிப்பு எதிரொலி

Added : செப் 10, 2021
Share
Advertisement
திருப்பூர்;திருப்பூர் மண்டலத்தில் இயங்கும் அரசு பஸ்களில் 'கலெக் ஷன்' மெல்ல அதிகரிக்க துவங்கியுள்ளது. டிப்போக்களில் நிறுத்தப்பட்டிருந்த பஸ்களும் இயக்கத்துக்கு வந்துள்ளது.ஊரடங்குக்கு பின் ஜூலை, 5 முதல் அரசு பஸ் இயக்கத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. துவக்கத்தில் கூட்டம் சற்று குறைந்திருந்தாலும், அடுத்தடுத்த நாட்களில் பலரும் பஸ்களில் பயணிக்க

திருப்பூர்;திருப்பூர் மண்டலத்தில் இயங்கும் அரசு பஸ்களில் 'கலெக் ஷன்' மெல்ல அதிகரிக்க துவங்கியுள்ளது. டிப்போக்களில் நிறுத்தப்பட்டிருந்த பஸ்களும் இயக்கத்துக்கு வந்துள்ளது.ஊரடங்குக்கு பின் ஜூலை, 5 முதல் அரசு பஸ் இயக்கத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. துவக்கத்தில் கூட்டம் சற்று குறைந்திருந்தாலும், அடுத்தடுத்த நாட்களில் பலரும் பஸ்களில் பயணிக்க துவங்கினர்.திருப்பூர் மண்டலத்தில், 90 சதவீத சர்வீஸ் மற்றும் 70 சதவீத டவுன் பஸ் மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. ஆனால், நடப்பு மாத துவக்கத்தில் இருந்து கூட்டம் மெல்ல அதிகரித்துள்ளது. நெரிசலை சமாளிக்க, டிப்போவில் நிறுத்தப்பட்டுள்ள அனைத்து பஸ்களும் இயக்கத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.ஜூலையில் திருப்பூர் முதல் கிளையில், ஐந்து லட்சம் ரூபாயும், இரண்டாவது கிளையில், நான்கு லட்சம் ரூபாயும் வருவாய் ஈட்டப்பட்டது. கொரோனாவுக்கு முந்தைய வருவாயோடு (முதல் கிளை பத்து லட்சம்; இரண்டாவது கிளை: ஏழு லட்சம்) ஒப்பிடுகையில் இது, 50 சதவீதம் தான் என போக்குவரத்து துறை அதிகாரிகள் புலம்பினர்.பழநி ஒன்று மற்றும் இரண்டு, தாராபுரம், பல்லடம், காங்கயம், உடுமலையை உள்ளடக்கிய திருப்பூர் மண்டலத்தில் நாள் ஒன்றுக்கு, 80 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டப்படும். ஜூலையில் எதிர்பார்த்த பயணிகள் இல்லாததால், நாள் ஒன்றுக்கு, 38 லட்சம் ரூபாய் வருவாய் மட்டுமே ஈட்டப்பட்டது.தற்போது பஸ்களில் கூட்டம் அதிகரிக்க துவங்கி, திருப்பூர் மண்டல 'கலெக் ஷன்' 45 லட்சம் ரூபாயை நெருங்கியுள்ளது. திருப்பூர் முதல் கிளை, ஏழு லட்சமும், இரண்டாவது கிளை, ஐந்து லட்சமும் வருவாய் ஈட்டுகிறது.கொரோனா முந்தைய நிலையோடு ஒப்பிடுகையில் 'கலெக் ஷன்' குறைவு என்றாலும், ஜூலையில் பஸ் இயக்கம் துவங்கிய போது இருந்த நிலைமைக்கு தற்போது பரவாயில்லை என்கின்றனர், அதிகாரிகள்.போக்குவரத்து துறை உயரதிகாரிகள் கூறுகையில்,' பள்ளிகள் திறப்பு, தொடர் முகூர்த்த தினங்களால் பஸ் கலெக் ஷன் சற்று அதிகரித்துள்ளது. இதனால், டிப்போவில் நிறுத்தி வைத்திருந்த அனைத்து பஸ்களையும் இயக்கத்துக்கு கொண்டு வந்துள்ளோம்.பெரும்பாலான பஸ்கள், 45 முதல், 50 இருக்கைகள் பயணிகள் நிரம்பி பயணிக்கின்றனர். பிற மாவட்டங்களில் இருந்து திருப்பூர் வருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது,' என்றனர்.தற்போது பஸ்களில் கூட்டம் அதிகரிக்க துவங்கி, திருப்பூர் மண்டல 'கலெக் ஷன்' 45 லட்சம் ரூபாயை நெருங்கியுள்ளது. திருப்பூர் முதல் கிளை, ஏழு லட்சமும், இரண்டாவது கிளை, ஐந்து லட்சமும் வருவாய் ஈட்டுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X