பொது செய்தி

தமிழ்நாடு

21 வகை இலை அர்ச்சனை!

Added : செப் 10, 2021
Share
Advertisement
விநாயகர் சதுர்த்தியன்று, 21 வகையான இலைகளைக் கொண்டு அர்ச்சனை செய்வது சிறந்தது எனப்படுகிறது.1. முல்லை இலை: அறம் வளரும்2. கரிசலாங்கண்ணி: இவ்வாழ்க்கைக்குத் தேவையான பொருள் சேரும்.3. விஸ்வம்: இன்பம், விரும்பியவை அனைத்தும் கிடைக்கும்.4. அருகம்புல்: அனைத்து சவுபாக்கியங்களும் கிடைக்கும்.5. இலந்தை இலை: கல்வியில் மேன்மையை அடை யலாம்.6. ஊமத்தை: பெருந்தன்மை கைவரப் பெறும்.7. வன்னி: பூவுலக

விநாயகர் சதுர்த்தியன்று, 21 வகையான இலைகளைக் கொண்டு அர்ச்சனை செய்வது சிறந்தது எனப்படுகிறது.1. முல்லை இலை: அறம் வளரும்2. கரிசலாங்கண்ணி: இவ்வாழ்க்கைக்குத் தேவையான பொருள் சேரும்.3. விஸ்வம்: இன்பம், விரும்பியவை அனைத்தும் கிடைக்கும்.4. அருகம்புல்: அனைத்து சவுபாக்கியங்களும் கிடைக்கும்.5. இலந்தை இலை: கல்வியில் மேன்மையை அடை யலாம்.6. ஊமத்தை: பெருந்தன்மை கைவரப் பெறும்.7. வன்னி: பூவுலக வாழ்விலும், சொர்க்க வாழ்விலும் நன்மைகள் கிடைக்கும்.8. அரளி இலை: எந்த முயற்சியிலும் வெற்றி கிடைக்கும்.9. எருக்கம் இலை: கருவிலுள்ள சிசுவுக்கு பாதுக்காப்பு கிடைக்கும்.10. நாயுருவி: முகப் பொலிவும், அழகும் கூடும்.11. கண்டங்கத்திரி: வீரமும், தைரியமும் கிடைக்கும்.12. மருதம்: மகப்பேறு கிடைக்கும்.13. விஷ்ணுகிராந்தி: நுண்ணறிவு கைவரும்.14. மாதுளை: பெரும் புகழும் நற்பெயரும் கிடைக்கும்.15. தேவதாரு: எதையும் தாங்கும் மனோ தைரியம் கிடைக்கும்.16. மருக்கொழுந்து: இல்லற வாழ்வு சுகம் பெறும்.17. அரசம்: உயர் பதவியும், பதவியால் கீர்த்தியும் கிடைக்கும்.18. ஜாதிமல்லி: சொந்த வீடு, மனை, பூமி பாக்கியம் கிடைக்கும்.19. தாழம்: செல்வச் செழிப்பு கிடைக்கும்.20. அகத்தி: கடன் தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கும்.21. தவனம் ஜகர்ப்பூரஸ இலை: நல்ல கணவன்- மனைவி அமையப் பெறும்.ஓம்கார நாயகர்!"விநாயகர்'- என்ற பெயரிலேயே, வினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பவர் என்ற பொருள் உள்ளது. வினைகளைக் களைபவர், வினைகளை அண்டவிடாமல் விரட்டிக் காத்து ரட்சிப்பவர் என்றும் பொருள் கொள்ளலாம். வாழ்க்கையில் ஏற்படும் இடர்பாடுகளை - வினைகளை - சோகங்களை - தன்னை நாடி வரும் பக்தர்களின் வினைகளைத் துவம்சம் செய்து, அவர்களுக்கு நிம்மதியை அளிப்பவர் என்பதே, விநாயகர் என்பதன் பொருள். தவிர விநாயகரின் உருவமே ஒரு விசித்திரத் தோற்றம் கொண்டது.யானையின் முகத்தை உடையவர். பொன்னிறத் தோற்றத்துடன் கூடிய மனித உடலில், தர்ப்பரி நூல் மார்பு, பேழை வயிறு. (மிகப்பெரிய பூதம் போன்ற வயிறு). துதிக்கையுடன் சேர்த்து ஐந்து கைகள். செந்தூரம் பூசிய முகம். சிலம்பு அணிந்த இரு கால்கள். இதுபோன்ற அனைத்து உருவங்களும் சேர்ந்ததே விநாயகப் பெருமானின் மொத்த வடிவம். விநாயகரின் உருவமே, ஒரு ஐக்கியத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளது. அனைத்து நாதங்களுக்கும் முன்னோடியாத் திகழ்வது "ஓம்கார ஒலி' என்றால், அநத "ஓம்காரமாய்' திகழ்வது விநாயகர் என்றால் அது மிகையில்லை. எனவே தான், விநாயகப் பெருமானை "ஓம்கார நாயகர்' என்றும் அழைக்கிறோம்.விநாயகர் ஜாதகம்சனிபகவான் ஒரு முறை, விநாயகரைப் பார்த்து, உங்களை நாளை வந்து பிடிக்க வேண்டும்; வருகிறேன் என்றார். சனீஸ்வரனே... எனக்கும் கணேசபுரியில் வேலைப்பளு அதிகம்; உமக்கும் அதிக வேலை இருக்கும். என்னைப் பிடிக்க வரும் நீங்கள், "என் முதுகில், நாளைக்கு வருகிறேன் என்று எழுதி விட்டுப் போங்கள்' என்று முதுகைக் காட்டினார். நாளை மறவாமல் வருகிறேன் என்று எழுதினார். சனீஸ்வரன் போய்விட்டு மறு நாள் வந்த போது, முதுகைக் காட்டி என்ன எழுதி உள்ளீர் என்று கேட்க, சனீஸ்வரன் அவரிடம் அடி பணிந்தார். "என்னை வணங்குபவர்களைப் பிடித்தால், உமக்கும் இது போல சங்கடம் ஏற்படும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X