கிடப்பில் பாலம் பணி: போக்குவரத்து பாதிப்பு| Dinamalar

கிடப்பில் பாலம் பணி: போக்குவரத்து பாதிப்பு

Added : செப் 10, 2021
Share
திருப்பூர்;குள்ளேகவுண்டன்புதுார் பஸ் ஸ்டாப் அருகே, சிறுபாலம் பணி கிடப்பில் போடப்பட்டதால், போக்குவரத்து பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.மங்கலம் கிராம நீரினை பயன்படுத்தும் பாசன விவசாயிகள் கூறியதாவது:திருப்பூர் -மங்கலம் ரோட்டில், மாநகராட்சியின், 60வது வார்டுக்கு உட்பட்டது குள்ளேகவுண்டன்புதுார். லிட்டில் பிளவர் பள்ளி பஸ் ஸ்டாப் அருகே, குறுக்கு ரோடுகள்

திருப்பூர்;குள்ளேகவுண்டன்புதுார் பஸ் ஸ்டாப் அருகே, சிறுபாலம் பணி கிடப்பில் போடப்பட்டதால், போக்குவரத்து பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.மங்கலம் கிராம நீரினை பயன்படுத்தும் பாசன விவசாயிகள் கூறியதாவது:திருப்பூர் -மங்கலம் ரோட்டில், மாநகராட்சியின், 60வது வார்டுக்கு உட்பட்டது குள்ளேகவுண்டன்புதுார். லிட்டில் பிளவர் பள்ளி பஸ் ஸ்டாப் அருகே, குறுக்கு ரோடுகள் சந்திக்கும் பகுதியில், நெடுஞ்சாலை ரோட்டின் குறுக்கே, சாக்கடை கால்வாய், சிறுபாலம் கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.ரோடு புதுப்பிக்கும் பணியும், அப்பகுதியில் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்கி, அப்பகுதியில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. விபத்து ஏற்படுவதை தவிர்க்க, போலீசார் 'பேரிகார்டு' வைத்துள்ளனர்.நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சி அதிகாரிகளை அழைத்துப்பேசி, குள்ளேகவுண்டன் புதுாரில் விரைவாக சாக்கடை கால்வாய் கட்டவும், போக்குவரத்து ஆபத்தை தவிர்க்கவும், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X