பொது செய்தி

தமிழ்நாடு

நகராட்சியாக அவிநாசி கட்சிகள் எதிர்பார்ப்பு

Added : செப் 10, 2021
Share
Advertisement
அவிநாசி:அவிநாசி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த, அரசியல் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.அவிநாசி நகர காங்., தலைவர் கோபாலகிருஷ்ணன், இந்திய கம்யூ., ஒன்றிய செயலாளர் இசாக், மா.கம்யூ., ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், மாவட்டக்குழு உறுப்பினர்கள் முத்துசாமி. ஈஸ்வரமூர்த்தி, ம.தி.மு.க., ஒன்றிய செயலாளர் சுப்ரமணியம், வி.சி ஒன்றிய செயலாளர் மாரிசாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள்

அவிநாசி:அவிநாசி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த, அரசியல் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.அவிநாசி நகர காங்., தலைவர் கோபாலகிருஷ்ணன், இந்திய கம்யூ., ஒன்றிய செயலாளர் இசாக், மா.கம்யூ., ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், மாவட்டக்குழு உறுப்பினர்கள் முத்துசாமி. ஈஸ்வரமூர்த்தி, ம.தி.மு.க., ஒன்றிய செயலாளர் சுப்ரமணியம், வி.சி ஒன்றிய செயலாளர் மாரிசாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கூறியதாவது;அவிநாசி பேரூராட்சி, நீண்ட காலமாக பேரூராட்சியாகவே இருந்து வருகிறது. இங்கு தாலுகா அலுவலகம், நீதிமன்றம், போலீஸ் ஸ்டேஷன், கிளைச்சிறை, ஊராட்சி ஒன்றிய அலுவலகம், அரசு தலைமை மருத்துவமனை, அரசு கலை, அறிவியல் கல்லுாரி, வட்டார போக்குவரத்து அலுவலகம், தேசிய மயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகள், கூட்டுறவு அமைப்புகளின் அலுவலகங்கள், பத்திரப்பதிவு அலுவலகம், தலைமை தபால் நிலையம், பயணியர் விடுதி. பி.எஸ்.என்.எல்.. அலுவலகம், வேளாண் துறை அலுவலகம், பஸ் ஸ்டாண்ட், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என, அனைத்து அரசு சார்ந்த அலுவலகங்கள் இயங்குகின்றன. அவிநாசி தாலுகா தலைமையிடமாக உள்ளது.'இப்பேரூராட்சியை, நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும்' என, பேரூராட்சி மக்கள், நீண்ட காலமாக எதிர்பார்க்கின்றனர். பழங்கரை ஊராட்சி, அவிநாசியின் மிக அருகில் இருப்பதால், அந்த ஊராட்சியை அவிநாசி பேரூராட்சியுடன் இணைத்து, நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும்.நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ள திருமுருகன்பூண்டியில், தேவையான அலுவலர்கள், பணியாளர்களை முழு அளவில் நிரப்ப வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.இதுகுறித்து, மாநில முதல்வருக்கு, மனுவும் அனுப்பியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X