இலவச பட்டா; விதிமீறல்கள் அம்பலம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இலவச பட்டா; விதிமீறல்கள் அம்பலம்

Added : செப் 10, 2021
Share
அவிநாசி:ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், தனியாரிடம் இருந்து நிலத்தை விலைக்கு வாங்கியோ அல்லது தனியார் தானமாக வழங்கிய நிலத்திலோ, ஆதிதிராவிட மக்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளன. அங்கு, பலரும் குடிசை மற்றும் வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர்.இந்நிலையில், அந்த பட்டா விவரங்களை இணைய தளத்தில் பதிவேற்றி, ஆதார் எண்ணுடன் இணைத்து, கம்ப்யூட்டர் மூலம் 'டிஜிட்டல்

அவிநாசி:ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், தனியாரிடம் இருந்து நிலத்தை விலைக்கு வாங்கியோ அல்லது தனியார் தானமாக வழங்கிய நிலத்திலோ, ஆதிதிராவிட மக்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளன. அங்கு, பலரும் குடிசை மற்றும் வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர்.இந்நிலையில், அந்த பட்டா விவரங்களை இணைய தளத்தில் பதிவேற்றி, ஆதார் எண்ணுடன் இணைத்து, கம்ப்யூட்டர் மூலம் 'டிஜிட்டல் பட்டா' வழங்குவதற்கான பணி, ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.முதற்கட்டமாக, கிராமம் தோறும் வி.ஏ.ஓ..க்கள் மூலம், ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் பட்டா பெற்றுள்ளவர்களின் விபரம் சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது.விதிமீறல்கள் அம்பலம்இந்த ஆய்வில், இலவச பட்டா பெற்ற பலர், அதை வெளிநபர்களுக்கு விற்றுள்ளனர்; ஒருவரே வெவ்வேறு இடங்களில் 3,4 பட்டா பெற்றுள்ளனர். பட்டாவில் பெயர் உள்ள பலர், வெளியூரில் வசிக்கின்றனர்; அந்த இடத்தில் மற்றவர்கள் வசிக்கின்றனர். ஒரே குடும்பத்தில், தந்தை, மகன், அம்மா என, ஒவ்வொருவர் பெயரிலும் பட்டா பெறப்பட்டுள்ளது என்பது போன்ற பல விதிமீறல் மற்றும் முறைகேடுகள் தெரியவந்துள்ளன.ஆதிதிராவிடர் நலத்துறையினர் கூறுகையில், 'இந்த சர்வே பணி மூலம், உண்மையான பயனாளிகள் குறித்த விபரத்தை, வி.ஏ.ஓ.,க்கள் ஒரு பக்க அறிக்கையாக சமர்பிப்பர். அதன்பிறகு, அவை இணைய தளத்தில் பதிவேற்றப்படும். முறைகேடு, விதிமீறி பட்டா பெற்றவர்களின் பட்டா ரத்து செய்யப்படும்,' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X