பொது செய்தி

தமிழ்நாடு

இன்று விநாயகர் சதுர்த்தி கோலாகலம்

Added : செப் 10, 2021
Share
Advertisement
திருப்பூர்:இன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது; சிலைகள் மற்றும் பொருட்களை வாங்க, திருப்பூரில் கடைவீதிகளில் மக்கள் குவிந்தனர். விழாவையொட்டி திருப்பூர் மாவட்டம் முழுவதும் 1,700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.இன்று விநாயகர் சதுர்த்தி விழா, திருப்பூரில் உள்ள பல்வேறு வீ திகளிலும் நேற்று, வீடுகளில் வைத்து வழிபடுவதற்கான விநாயகர் சிலைகள்,
 இன்று விநாயகர் சதுர்த்தி கோலாகலம்

திருப்பூர்:இன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது; சிலைகள் மற்றும் பொருட்களை வாங்க, திருப்பூரில் கடைவீதிகளில் மக்கள் குவிந்தனர். விழாவையொட்டி திருப்பூர் மாவட்டம் முழுவதும் 1,700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.இன்று விநாயகர் சதுர்த்தி விழா, திருப்பூரில் உள்ள பல்வேறு வீ திகளிலும் நேற்று, வீடுகளில் வைத்து வழிபடுவதற்கான விநாயகர் சிலைகள், அதிகளவில் விற்பனையாகின. பூ உள்ளிட்டவற்றின் விற்பனையும் அதிகரித்திருந்தது. கடை வீதிகளில் மக்கள் கூட்டம் குவிந்தது. இதனால், திருப்பூரின் பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல்லடம், அவிநாசி, வெள்ளகோவில், காங்கயம், தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும், கடைவீதிகளில் மக்கள் கூட்டம் குவிந்திருந்தது.''தனிநபர், அவரவர் வீடுகளில் சிலையை வைத்து வழிபடலாம், அருகே உள்ள நீர்நிலைகளில், சிலையை எடுத்துச்சென்று கரைக்கலாம். நீர்நிலை இல்லாதபட்சத்தில், அருகே உள்ள கோவில்களில், சிலையை வைத்துவிடலாம்; அரசு உத்தரவை பின்பற்றாதபட்சத்தில், கடும் நடவடிக்கை எடுக்கப்படும'' என கலெக்டர் வினீத் எச்சரித்துள்ளார்.1,700 போலீஸ் பாதுகாப்புஹிந்து அமைப்புகள், விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட தீவிரமாக உள்ளனர். நேற்று முன்தினம் கலெக்டர் முன்னிலையில் இது குறித்து ஆலோசனை நடத்தி அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. நேற்று மாநகர போலீஸ் கமிஷனர் முன்னிலையில் நடந்த ஆலோசனைக்கூட்டத்தில், அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.சதுர்த்தி விழா கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிக்கு திருப்பூர் மாவட்டத்தில் 1,700 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநகர போலீஸ் எல்லையில் மாநகர போலீஸ் கமிஷனர் தலைமையில், இரு துணை கமிஷனர்கள், நான்கு உதவி கமிஷனர்கள், 10 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் என மொத்தம் 750 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.திருப்பூர் மாவட்ட அளவில் எஸ்.பி., தலைமையில், இரு கூடுதல் எஸ்.பி.,க்கள் ஆறு டி.எஸ்.பி.,க்கள், 30 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் என மொத்தம் 950 பேர் கண்காணிப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.அரசு தரப்பில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையிலும், கோவில்கள், சொந்த இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபட பல்வேறு தரப்பினரும் ஏற்பாடு செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X