பனியன் நிறுவனங்கள் முழுவேகம் 80 டன் சரக்குகள் முன்பதிவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பனியன் நிறுவனங்கள் முழுவேகம் 80 டன் சரக்குகள் முன்பதிவு

Added : செப் 10, 2021
Share
திருப்பூர்:திருப்பூரில் பனியன் நிறுவனங்கள் முழு வேகத்தில் இயங்க துவங்கியதையடுத்து, ரயில் மூலம் திருப்பூரில் இருந்து வெளியூருக்கு சரக்கு முன்பதிவு அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில், 80 டன் சரக்கு முன்பதிவானது.திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து தினமும், 60 முதல், 75 டன் சரக்குகள் ரயில் மூலம் பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வந்தது. குறிப்பாக, ஷாலிமர்,
 பனியன் நிறுவனங்கள் முழுவேகம்  80 டன் சரக்குகள் முன்பதிவு

திருப்பூர்:திருப்பூரில் பனியன் நிறுவனங்கள் முழு வேகத்தில் இயங்க துவங்கியதையடுத்து, ரயில் மூலம் திருப்பூரில் இருந்து வெளியூருக்கு சரக்கு முன்பதிவு அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில், 80 டன் சரக்கு முன்பதிவானது.திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து தினமும், 60 முதல், 75 டன் சரக்குகள் ரயில் மூலம் பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வந்தது. குறிப்பாக, ஷாலிமர், ஹவுரா(மேற்கு வங்கம்), மும்பை, ைஹதராபாத், டில்லி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் ரயில்களில் இரவும், பகலும் தொடர்ந்து சரக்கு அனுப்பி வைக்கப்பட்டது.கேரள தலைநகர் திருவனந்தபுரம், கொச்சி துறைமுகத்துக்கு இங்கிருந்து பனியன் நிறுவன ஆர்டர்கள் அனுப்பப்பட்டு வந்தது, கொரோனா இரண்டாவது அலை காரணமாக பனியன் நிறுவனங்கள் இயக்கம் குறைந்ததால், ரயிலில் சரக்கு முன்பதிவும் குறைந்தது. 30 முதல், 45 டன் சரக்கு மட்டுமே முன்பதிவாகி வந்தது.தற்போது, பனியன் நிறுவனங்கள் முழு அளவில் இயங்க துவங்கியதால், ரயிலில் அனுப்பும் சரக்குக்கான முன்பதிவு அதிகரித்துள்ளது. ரயில்வே ஸ்டேஷன் முதல் மற்றும் இரண்டாவது பிளாட்பார்மில், 100 மீ., துாரத்துக்கு நுாற்றுக்கும் அதிகமான பண்டல்கள், சரக்கு ரயிலில் அனுப்ப அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.நேற்று ஒரே நாளில், 80 டன் சரக்கு முன்பதிவாகியது. இரு மாதங்களாக, 35 முதல், 50 டன் சரக்கு மட்டுமே அனுப்ப பட்டு வந்த நிலையில், நேற்று கூடுதலாக பத்து டன் முன்பதிவாகியது.கூட்ஸ்ெஷட் அதிகாரிகள் கூறுகையில், 'நடப்பாண்டில் ஏப்ரல், மே மாதங்களில் இருந்த நிலை தற்போது மாறியுள்ளது. பனியன் நிறுவனங்கள் முழு அளவில் இயக்கத்தை துவங்கியுள்ளதால், அதிகளவில் சரக்கு முன்பதிவாகிறது.80 சதவீத ரயில்கள் இயங்கி வருவதால், முன்பதிவு செய்த சரக்குகள், 48 மணி நேரத்துக்குள் அனுப்பி வைக்கப்படுகிறது. திருப்பூரில் இருந்து சரக்குகளை ரயில் மூலம் அனுப்ப விரும்புவோர் 9600956238 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம். எடை, பயணிக்கும் (கி.மீ., அடிப்படையில்) துாரத்துக்கு ஏற்ப கட்டணம் மாறுபடும்,' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X