தரமான ரேஷன் அரிசி, இனி கிடைக்கும்! சாம்பிள் காட்டி முன் அனுமதி பெற உத்தரவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தரமான ரேஷன் அரிசி, இனி கிடைக்கும்! 'சாம்பிள்' காட்டி முன் அனுமதி பெற உத்தரவு

Added : செப் 10, 2021
Share
திருப்பூர்;ரேஷன் கடையில் தரமான அரிசியை வழங்க ஏதுவாக, 'சாம்பிள்' அனுப்பி ஒப்புதல் பெற வேண்டுமென, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.திருப்பூர் மாவட்டத்தில், ரேஷன் கடைகளில் வழங்கிய அரிசி தரமற்றதாக இருப்பதாக, பொதுமக்கள் குற்றம்சாட்டினர். குறிப்பாக, சட்டசபை தேர்தல் நேரத்திலும், அதற்கு பிறகும், தரமில்லாத அரிசி ரேஷனில் வழங்கப்பட்டது.கோதுமை போன்ற பழுப்பு நிறமான அரிசி, கறுப்பு

திருப்பூர்;ரேஷன் கடையில் தரமான அரிசியை வழங்க ஏதுவாக, 'சாம்பிள்' அனுப்பி ஒப்புதல் பெற வேண்டுமென, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.திருப்பூர் மாவட்டத்தில், ரேஷன் கடைகளில் வழங்கிய அரிசி தரமற்றதாக இருப்பதாக, பொதுமக்கள் குற்றம்சாட்டினர். குறிப்பாக, சட்டசபை தேர்தல் நேரத்திலும், அதற்கு பிறகும், தரமில்லாத அரிசி ரேஷனில் வழங்கப்பட்டது.கோதுமை போன்ற பழுப்பு நிறமான அரிசி, கறுப்பு அரிசி நிறைந்த அரிசி, நீண்ட நாள் இருப்பு வைத்து துர்நாற்றம் வீசிய அரிசி வழங்கப்பட்டது. இதனால், ரேஷன் கடைகளின் முன் பொதுமக்கள் போராட வேண்டிய சூழல் ஏற்பட்டது,தேர்தல் முடிந்ததும், ரேஷனில் தரமற்ற அரிசி வழங்குவதாக, எம்.எல்.ஏ.,க்களிடம் மக்கள் முறையிட்டனர். ''தரமான அரிசி வழங்கினால் மட்டும் பெற்றுக்கொள்ளுங்கள்; தரமில்லாத அரிசியை பெறாதீர்கள்'' என, பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.பொதுமக்கள் போராட்டம், கலெக்டர் வரை எதிரொலித்தது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகளை அழைத்துப்பேசிய கலெக்டர் வினீத், பொதுமக்களுக்கு தரமான அரிசி வினியோகம் செய்ய வேண்டுமென உத்தரவிட்டார். அதற்காக தொடர் ஆய்வுகளும் நடத்தப்பட்டது.இந்நிலையில், ஒவ்வொரு மாதமும், ரேஷன் கடைகளில் வினியோகம் செய்யப்படும் அரிசி குறித்து, 'சாம்பிள்' காண்பித்து, முன் அனுமதி பெற வேண்டுமென, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து உணவு பொருள் வழங்கல்துறை அதிகாரிகள் கூறுகையில், 'ரேஷன் கடையில், தரமற்ற அரிசி வினியோகம் செய்வதாக புகார் எழுந்தது. தரமற்ற அரிசியை வழங்கியதால், மாவட்டம் முழுவதும் அதிருப்தி இருந்தது. இனிமேல் தரமான அரிசியை வழங்க வேண்டும்; தரமற்ற அரிசியை ஒதுக்கீடு செய்தால் திருப்பி அனுப்பிவிடுமாறு, கலெக்டர் எச்சரித்துள்ளார்.ஒவ்வொரு மாதமும், ஒதுக்கீடு செய்யப்படும் அரிசியின் தரத்தை அறிய, 'சாம்பிள்' அரிசியை காண்பித்து ஒப்புதல் பெற வேண்டுமென, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, நுகர்பொருள் வாணிப கழகத்தினர், 'சாம்பிள்' அரிசியை காண்பித்து ஒப்புதல் பெற்ற பிறகே, ரேஷன் கடைகளுக்கு அரிசி மூட்டை அனுப்பி வைக்கப்படுகிறது,' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X