சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடைகளில் குட்கா பறிமுதல்

Added : செப் 10, 2021
Share
Advertisement
அவிநாசி:உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் விஜய லலிதாம்பிகை தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர் குழுவினர் அவிநாசி பகுதியில் உள்ள கடைகளில் ரெய்டு நடத்தினர்.மளிகை கடை, ஹோட்டல் மற்றும் தன்ளுவண்டி கடைகள் என, 16 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.தெக்கலுார் ஆலாம்பாளையம் பகுதியில், 2 கடைகளில் இருந்து ஒரு கிலோ அளவில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா, புகையிலை

அவிநாசி:உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் விஜய லலிதாம்பிகை தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர் குழுவினர் அவிநாசி பகுதியில் உள்ள கடைகளில் ரெய்டு நடத்தினர்.மளிகை கடை, ஹோட்டல் மற்றும் தன்ளுவண்டி கடைகள் என, 16 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.தெக்கலுார் ஆலாம்பாளையம் பகுதியில், 2 கடைகளில் இருந்து ஒரு கிலோ அளவில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா, புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, தலா, 5,000 ரூபாய் வீதம்,10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அதே கடைகளில், தடை செய்யப்பட்ட பாலிதீன் பொருட்கள் கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டன; அபராதமும் விதிக்கப்பட்டது.சேவூர் பகுதியில் உள்ள தள்ளுவண்டி கடைகள் மற்றும் துரித உணவு கடைகளில், மறு சுழற்சி செய்யும் திட்டத்தின் கீழ், ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயை சேகரிக்கும் கேன்கள் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X