பொது செய்தி

தமிழ்நாடு

முன்பதிவில்லாத ரயில் சேவைவடமதுரை மக்கள் எதிர்பார்ப்பு

Added : செப் 10, 2021
Share
Advertisement
வடமதுரை-திண்டுக்கல் - திருச்சி இடையே முன்பதிவில்லாத பயணிகள் ரயில் சேவையை துவக்க வேண்டும்.வடமதுரை வழியே கொரோனா பிரச்னைக்கு முன்னர் திண்டுக்கல் - திருச்சி, மதுரை- விழுப்புரம், திருநெல்வேலி- மயிலாடுதுறை என 3 பயணிகள் ரயில் இருந்தன. கொரோனா பிரச்னையால் பயணிகள் ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது.பின்னர் முன்பதிவு கொண்ட சிறப்பு ரயில்கள் படிப்படியாக இயங்க

வடமதுரை-திண்டுக்கல் - திருச்சி இடையே முன்பதிவில்லாத பயணிகள் ரயில் சேவையை துவக்க வேண்டும்.வடமதுரை வழியே கொரோனா பிரச்னைக்கு முன்னர் திண்டுக்கல் - திருச்சி, மதுரை- விழுப்புரம், திருநெல்வேலி- மயிலாடுதுறை என 3 பயணிகள் ரயில் இருந்தன. கொரோனா பிரச்னையால் பயணிகள் ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது.பின்னர் முன்பதிவு கொண்ட சிறப்பு ரயில்கள் படிப்படியாக இயங்க துவங்கின.இதிலும் தளர்வு அளித்து தற்போது திருச்சி - காரைக்கால், மதுரை - செங்கோட்டை என பல வழித்தடங்களில் ஆக.30 முதல் முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.ஆனால் வடமதுரை, அய்யலுார் பகுதியினர் பயன்பெறும் வகையில் இதுவரை ரயில் சேவை கிடைக்காமல் உள்ளது.ரயில் நிலைய பாதுகாப்பு கமிட்டி தலைவர் பத்மநாபன் கூறுகையில், ''தற்போது கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் பஸ்கள் வழக்கம் போல இயக்கப்படுகின்றன.திண்டுக்கல் - திருச்சி இடையேயும் முன்பதிவில்லாத பயணிகள் ரயில்களை இயக்க வேண்டும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X