சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆர்ப்பாட்டம்

Added : செப் 10, 2021
Share
Advertisement
திருப்பூர்:டில்லியில் பெண் போலீஸ் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், உரிய நீதி விசாரணை நடத்தி, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.நேசனல் உமன்ஸ் பிரண்ட் அமைப்பு சார்பில், காங்கயம் கிராஸ் ரோட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ராபியத்துல் பஷரியா தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ரதிஷா,
 ஆர்ப்பாட்டம்

திருப்பூர்:டில்லியில் பெண் போலீஸ் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், உரிய நீதி விசாரணை நடத்தி, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.நேசனல் உமன்ஸ் பிரண்ட் அமைப்பு சார்பில், காங்கயம் கிராஸ் ரோட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ராபியத்துல் பஷரியா தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ரதிஷா, சஹானா ரகமதுல்லா உள்ளிட்டோர் பேசினர். மங்கலம் கிளை நிர்வாகிகள் சர்மிளா பானு, சாஜிதா சலாவுதின் உட்பட பலர் பங்கேற்றனர்.இதில் திரளாகப் பங்கேற்ற உறுப்பினர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.இந்திய தேசிய லீக்: டில்லியில் பெண் போலீஸ் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய தேசிய லீக் சார்பில் நேற்று மாலை, குமரன் சிலை முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ராஜா முகமது தலைமை வகித்தார். மாநில இளைஞர் அணி தலைவர் அல் ஆசிக், மாநில செயலாளர் அஸ்லம் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை செயலாளர் ஜாவீத் உசேன் உள்ளிட்டோர் பேசினர். இதில் திரளாகப் பங்கேற்ற உறுப்பினர்கள் கோஷமெழுப்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X