பொது செய்தி

தமிழ்நாடு

'சமூகத்தை பாதுகாக்க நாம் தடுப்பூசி செலுத்த வேண்டும்'

Added : செப் 10, 2021
Share
Advertisement
திண்டுக்கல்-'சமூகத்தை பாதுகாக்க ஒவ்வொருவரும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதை கடமையாக கருத வேண்டும்' என, மருத்துவம் மற்றும் குடும்ப நலன் துணை இயக்குனர் பூங்கோதை கூறினார். கொரோனா மூன்றாம் அலை எச்சரிக்கை குறித்து?தடுப்பூசிகள் மட்டுமே கொரோனா தொற்றின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள உதவும். சமூக இடைவெளி, முகக்கவசம் போன்ற வழிகாட்டு நெறிமுறைகளும் மிக அவசியம். 18

திண்டுக்கல்-'சமூகத்தை பாதுகாக்க ஒவ்வொருவரும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதை கடமையாக கருத வேண்டும்' என, மருத்துவம் மற்றும் குடும்ப நலன் துணை இயக்குனர் பூங்கோதை கூறினார். கொரோனா மூன்றாம் அலை எச்சரிக்கை குறித்து?தடுப்பூசிகள் மட்டுமே கொரோனா தொற்றின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள உதவும். சமூக இடைவெளி, முகக்கவசம் போன்ற வழிகாட்டு நெறிமுறைகளும் மிக அவசியம். 18 வயதிற்கு மேற்பட்டோர் கட்டாயம் தடுப்பூசி 2 டோஸ்களையும் செலுத்த வேண்டியது கட்டாயம். கர்ப்பிணிகள், பாலுாட்டும் தாய்மார்கள் தடுப்பூசிக்கு தயங்குகின்றனரே?ஆரம்பத்தில் தயக்கம் காட்டியது உண்மைதான். தற்போது ஆர்வம் காட்டி வருகின்றனர். மாவட்டத்தில் 95 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்த முன்வந்துள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை முடிந்து மருத்துவமனையிலிருந்து செல்வதற்கு முன்பே தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி செலுத்தி வருகிறோம். ஒரு வேளை வீட்டிற்கு சென்று விட்டால், கிராம சுகாதார செவிலியர்கள் அவர்களின் வீட்டுக்குச் சென்று, ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது முகாமிற்கு அவர்களே அழைத்துச் சென்று தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்கின்றனர். சுபநிகழ்வுகள், கூட்டமான பகுதிக்கு கர்ப்பிணிகள் செல்லலாமா?கூட்டம் கூடும் எந்த நிகழ்வாக இருந்தாலும் 99 சதவீதம் தவிர்ப்பதே அவர்களுக்கு நல்லது. தவிர்க்க முடியாத காரணம் என்றாலும் முறையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியே தீரவேண்டும். முடிந்தவரை தவிர்ப்பதுதான் வயிற்றில் உள்ள குழந்தைக்கும், அவர்களுக்கும் நல்லது. குடும்பநல அறுவை சிகிச்சையில் திண்டுக்கல் முதலிடம் பெற்றுள்ள தாமே? இதில் திண்டுக்கல் மாவட்டம் 3வது முறையாக முதலிடம் வகிக்கிறது. அதோடு, குழந்தை பிறந்தவுடன் அடுத்த குழந்தைக்கான கால தாமதத்தை ஏற்படுத்தும் முறையை பின்பற்றுவதிலும் மாநில அளவில் திண்டுக்கல்தான் முதலிடம் வகிக்கிறது. கொரோனா 3ம் அலையில் குழந்தைகளுக்குத்தான் பாதிப்பு எற்படுமா?முதலில் வீட்டில் உள்ளவர்கள் தடுப்பூசி செலுத்தினாலே போதும். குழந்தைகளுக்கு பாதிப்பு வராது. பெற்றோர் மூலமாகவே குழந்தைகளுக்கு பாதிப்பு வரும். பெரியவர்கள் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்தால், குழந்தைகள் இயல்பாகவே பாதுகாக்கப்படுவர். கொரோனா காலப்பணி எப்படி இருந்ததுமருத்துவர்களுக்கும், பணியார்களுக்கும் இது தொடரும் பணி. 2 அலைகளை எதிர்கொண்டு பணியாற்றியுள்ளோம். நல்லது, கெட்டது என எங்கும் செல்ல முடியாமல் சேவை உணர்வோடு அனைவரும் பணியாற்றினர். எல்லா களப்பணியாளர்களுமே கடும் உழைப்பை தந்தனர்.தற்போதுள்ள ஒரே பணி 100 சதவீதம் தடுப்பூசி சென்றடைய வேண்டுமே என்பது மட்டும்தான். அப்போதுதான் 3ம் அலை வந்தாலும் பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும். செப்.12 ல் தமிழக அளவில் 'மெகா முகாம்' நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சம் ஒருநாளில் எந்த அளவிற்கு தடுப்பூசி செலுத்த முடியுமோ அதை செயல்படுத்த தயாராகி வருகிறோம். மகப்பேறு மரணம் குறைந்துள்ளதா?நமது மாவட்டத்தில் மகப்பேறு மரணங்கள் குறைவுதான். சமீபத்தில் கூட சில மகப்பேறு பெண்களுக்கு ரத்தப்போக்கு அதிகமாகி கடும் அவதிக்குள்ளாகினர். நமது மருத்துவர்கள் பெரும்பாடுபட்டு அவர்களை காப்பாற்றினர். மரணங்களை தடுக்க முக்கிய காரணம் அடிப்படை பணியாளர்கள் முதல் மருத்துவர்களின் முழுஈடுபாடு மட்டுமே. மருத்துவத் துறைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு எந்த வகையில் அவசியம்? கொரோனாவை பொறுத்தவரை தடுப்பூசி செலுத்திக் கொள்வது முதல் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவது வரை அனைத்தையும் ஒரு கடமையாக நினைக்க வேண்டும். பொது மக்களுக்கு சமூகத்தை காக்க வேண்டிய கடமையும் உள்ளது. தடுப்பூசி செலுத்துவதால் நமக்கும், நம் சமுதாயத்திற்கும் எந்தவித பாதிப்பும் வரக்கூடாது என உறுதிமொழி எடுக்க வேண்டும். அரசு காட்டும் வழிகாட்டு நெறிமுறைகளை கடமையாக பின்பற்ற வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X