பொது செய்தி

தமிழ்நாடு

சீசன் இல்லாததால் பன்னீர்திராட்சை விலை உயர்வு: கிலோ ரூ.120

Added : செப் 10, 2021
Share
Advertisement
திண்டுக்கல்-திண்டுக்கல்லில் வரத்து குறைவால் பன்னீர் திராட்சை கிலோ ரூ.120 க்கு விற்பனையாகிறது.மாவட்டத்தில் 300 எக்டேரில் பன்னீர் திராட்சை (கருப்பு) சாகுபடியாகிறது. சீசன் காலத்தில் தினமும் மார்க்கெட்டிற்கு 3 டன் விற்பனைக்கு வரும். போதிய மழையின்மை, தண்ணீர் பற்றாக்குறையால் திராட்சை சாகுபடி சில ஆண்டுகளாக சுருங்கி வருகிறது. தற்போது மழையை எதிர்பார்த்து ஏ.வெள்ளோடு, கொடைரோடு

திண்டுக்கல்-திண்டுக்கல்லில் வரத்து குறைவால் பன்னீர் திராட்சை கிலோ ரூ.120 க்கு விற்பனையாகிறது.மாவட்டத்தில் 300 எக்டேரில் பன்னீர் திராட்சை (கருப்பு) சாகுபடியாகிறது. சீசன் காலத்தில் தினமும் மார்க்கெட்டிற்கு 3 டன் விற்பனைக்கு வரும். போதிய மழையின்மை, தண்ணீர் பற்றாக்குறையால் திராட்சை சாகுபடி சில ஆண்டுகளாக சுருங்கி வருகிறது. தற்போது மழையை எதிர்பார்த்து ஏ.வெள்ளோடு, கொடைரோடு பகுதிகளில் திராட்சை சாகுபடி நடக்கிறது.உள்ளூர் மற்றும் வெளியூர் வரத்து இல்லாததால் திராட்சை விலை அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் கிலோ ரூ.90 க்கு விற்ற திராட்சை, இம்மாதம் ரூ.30 அதிகரித்து ரூ.120 க்கு விற்கிறது. சீசன் இல்லாததால் பச்சை திராட்சை வரத்தும் இல்லை. பண்டிகை, தொடர் முகூர்த்தம் என்பதால் பன்னீர் திராட்சைக்கு மவுசு அதிகம் உள்ளது. இதனால் விலை அதிகமாக இருந்தும் பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X