பொது செய்தி

தமிழ்நாடு

நிபா வைரஸ் பாதிப்பு: நீலகிரியில் விழிப்புணர்வு

Added : செப் 10, 2021
Share
Advertisement
ஊட்டி:நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அறிக்கை;நிபா வைரஸ் பழந்தின்னி வவ்வால்கள் மூலமாக பெருக்கம் அடைகிறது. நோய் வாய்ப்பட்ட பழந்தின்னி வவ்வால் பன்றி மற்றும் பாதிக்கப்பட்ட மனிதர்களிடம் இருந்து மற்றவருக்கு பரவுகிறது.மேலும், வவ்வால்கள் கடித்த பழங்களை உண்பதன் மூலம் மனிதர்களுக்கு பரவும் வாய்ப்புள்ளது. நிபா வைரஸ் நோயானது மூளைக் காய்ச்சல் நோய்க்கான அறிகுறிகளை

ஊட்டி:நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அறிக்கை;நிபா வைரஸ் பழந்தின்னி வவ்வால்கள் மூலமாக பெருக்கம் அடைகிறது. நோய் வாய்ப்பட்ட பழந்தின்னி வவ்வால் பன்றி மற்றும் பாதிக்கப்பட்ட மனிதர்களிடம் இருந்து மற்றவருக்கு பரவுகிறது.மேலும், வவ்வால்கள் கடித்த பழங்களை உண்பதன் மூலம் மனிதர்களுக்கு பரவும் வாய்ப்புள்ளது. நிபா வைரஸ் நோயானது மூளைக் காய்ச்சல் நோய்க்கான அறிகுறிகளை வெளிப்படுத்தும், கடும் காய்ச்சல்; தலைவலி மயக்கம்; சுய நினைவு இழத்தல்; மன குழப்பம் கோமா மற்றும் மரணம் ஏற்படலாம். பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளிப்பதன் மூலம் குணப்படுத்தலாம். மேலும், விபரங்களுக்கு 0423-1077, 0423--2450034, 2450033. எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X