பொது செய்தி

தமிழ்நாடு

சூலூர் தாலுகாவில் 180 இடங்களில் 'மெகா கேம்ப்' : தடுப்பூசி போட சுகாதாரத்துறை தீவிரம்

Added : செப் 10, 2021
Share
Advertisement
சூலுார்;சூலுார் தாலுகாவில், 180 இடங்களில், 'மெகா கேம்ப்' அமைத்து தடுப்பூசிகள் போட சுகாதாரத்துறை தயாராகி வருகிறது.சூலுார் தாலுகாவில், சுல்தான்பேட்டை மற்றும் சூலுார் என, இரு ஒன்றியங்கள் உள்ளன. 4 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இருகூர், சோமனுார், கருமத்தம்பட்டி, வாகராயம்பாளையம் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் சூலுாரிலும், வதம்பச்சேரி மற்றும் வி.சந்திராபுரம் ஆகிய ஆரம்ப

சூலுார்;சூலுார் தாலுகாவில், 180 இடங்களில், 'மெகா கேம்ப்' அமைத்து தடுப்பூசிகள் போட சுகாதாரத்துறை தயாராகி வருகிறது.சூலுார் தாலுகாவில், சுல்தான்பேட்டை மற்றும் சூலுார் என, இரு ஒன்றியங்கள் உள்ளன. 4 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இருகூர், சோமனுார், கருமத்தம்பட்டி, வாகராயம்பாளையம் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் சூலுாரிலும், வதம்பச்சேரி மற்றும் வி.சந்திராபுரம் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்கள், சுல்தான்பேட்டை ஒன்றியத்திலும் உள்ளன.கொரோனா தடுப்பூசி முகாம்கள், மேற்கண்ட சுகாதார நிலையங்களிலும், சூலுார் அரசு மருத்துவமனையிலும் தொடர்ந்து நடத்தப்படுகின்றன. மேலும், ஒவ்வொரு ஊராட்சிகளிலும், சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.இதுவரை, தாலுகாவில், 1 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. தடுப்பூசி போடும் பணியை மேலும் துரிதப்படுத்த, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக, ஒவ்வொரு பகுதியிலும் 'மெகா கேம்ப்' நடத்த தயாராகும் படி சுகாதார துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.சூலுார் தாலுகாவில் உள்ள இரு ஒன்றியங்களிலும் வரும், 12ம் தேதி 'மெகா கேம்ப்'கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சூலுாரில், 120 சுல்தான்பேட்டையில், 60 இடங்களிலும் முகாம்கள் நடத்த முடிவாகியுள்ளது.சூலுார் வட்டார மருத்துவ அலுவலர் உமர் பாரூக் கூறியதாவது:போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடத்தப்படுவதை போல், தடுப்பூசிகள் போட 'மெகா கேம்ப்' நடத்தப்பட உள்ளது. வரும், 12ம் தேதி, சூலுார் தாலுகாவில், 180 இடங்களில் கேம்ப் நடத்தப்படும்.காலை, 7:00 முதல் இரவு 7:00 மணி வரை நடக்கும் முகாமில், முதல் மற்றும் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடப்படும். கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்படும். சுகாதார துறையினரின் மேற்பார்வையில், 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்க உள்ளனர். இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி நடக்கிறது. முகாம்கள், அந்தந்த ஊராட்சி பகுதியிலேயே நடப்பதால் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள், வாய்ப்பை பயன்படுத்தி தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X