சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாலமேடு பகுதியில் இரவில் மண் திருட்டு

Added : செப் 10, 2021
Share
Advertisement
பாலமேடு-பாலமேடு மஞ்சமலை ஆற்று பகுதியில் பட்டா மற்றும் புறம்போக்கு நிலங்களில் இரவில் மண் திருட்டு தொடர்கிறது.பேரூராட்சி குப்பை கிடங்கு துவங்கி ஆற்றின் இருபுறமும் இரவில் மண் அள்ளும் இயந்திரம் மூலம் செம்மண் மற்றும் மணல் திருட்டு வருவாய்த்துறை ஆதரவோடு நடக்கிறது. நில உரிமையாளர்களுக்கு குறிப்பிட்ட தொகையை வழங்கும் மணல் மாபியாக்கள் இரவில் இயந்திரங்கள் மூலம்

பாலமேடு-பாலமேடு மஞ்சமலை ஆற்று பகுதியில் பட்டா மற்றும் புறம்போக்கு நிலங்களில் இரவில் மண் திருட்டு தொடர்கிறது.பேரூராட்சி குப்பை கிடங்கு துவங்கி ஆற்றின் இருபுறமும் இரவில் மண் அள்ளும் இயந்திரம் மூலம் செம்மண் மற்றும் மணல் திருட்டு வருவாய்த்துறை ஆதரவோடு நடக்கிறது. நில உரிமையாளர்களுக்கு குறிப்பிட்ட தொகையை வழங்கும் மணல் மாபியாக்கள் இரவில் இயந்திரங்கள் மூலம் லாரிகளில் 10 அடிக்குமேல் மண் திருட்டில் ஈடுபடுகின்றனர். ஆர்.ஐ., அலுவலகம் எதிரே வாகனங்கள் வெளியேறுகின்றன. இதற்காக பல்வகை மரங்கள் வெட்டபட்டுள்ளன. சில ஆண்டுகளாக மஞ்சமலை ஆற்றில் நீர்வரத்து இல்லை. தண்ணீர் வந்தால் கரைகள் உடைந்து நிலங்கள் சரியும் நிலையில் உள்ளன. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X