பொது செய்தி

தமிழ்நாடு

24 இடங்களில் தடையை மீறி பிரதிஷ்டை செய்ய முடிவு

Added : செப் 10, 2021
Share
Advertisement
அன்னுார்:அன்னுார் வட்டாரத்தில் தடையை மீறி, 24 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, பொது இடங்களில் விநாயகர் சிலை நிறுவுவது, பொது இடங்களில் சதுர்த்தி விழா கொண்டாடுவது, ஊர்வலமாக எடுத்துச் செல்வது, நீர் நிலைகளில் கரைப்பது ஆகியவற்றிற்கு அரசு தடை விதித்துள்ளது.நேற்று முன்தினம் இரவு, அன்னுார் போலீஸ் ஸ்டேஷனில்

அன்னுார்:அன்னுார் வட்டாரத்தில் தடையை மீறி, 24 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, பொது இடங்களில் விநாயகர் சிலை நிறுவுவது, பொது இடங்களில் சதுர்த்தி விழா கொண்டாடுவது, ஊர்வலமாக எடுத்துச் செல்வது, நீர் நிலைகளில் கரைப்பது ஆகியவற்றிற்கு அரசு தடை விதித்துள்ளது.நேற்று முன்தினம் இரவு, அன்னுார் போலீஸ் ஸ்டேஷனில் ஆலோசனை கூட்டம் நடந்தது. ''பொது இடங்களில் விநாயகர் சிலை வைப்பதற்கும், கொண்டாடுவதற்கும் அனுமதி இல்லை,'' என, இன்ஸ்பெக்டர் நித்யா, இந்து முன்னணி நிர்வாகிகளிடம் தெரிவித்தார்.இந்து முன்னணி கோவை வடக்கு மாவட்ட செயலாளர் குட்டி கூறுகையில், ''இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் இல்லாத கோவில்களில், நாங்கள் சிலையை வைத்துக் கொள்கிறோம்.மேலும் இந்து முன்னணி நிர்வாகிகள், தொண்டர்கள் வீடுகளிலும் சிலையை வைக்கிறோம். வழக்கமாக, 60 இடங்களில் சிலை வைப்போம். நடப்பாண்டு அரசு கட்டுப்பாடு விதித்ததையடுத்து, 24 இடங்களில் சிலை வைக்கப்படுகிறது. 24 இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு, விநாயகர் சிலைகள் பவானி ஆற்றில் கரைக்கப்படும்,'' என்றார்.* மேட்டுப்பாளையம் தாலுகாவில், காரமடை கிழக்கு ஒன்றியத்தில், 40 இடங்களிலும், மேற்கு ஒன்றியத்தில், 26, காரமடை நகரில், 60, மேட்டுப்பாளையம் நகரில், 39 இடங்கள் என மொத்தம், 165 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க, இந்து முன்னணி முடிவு செய்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, இந்து முன்னணி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X