பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா 'ஒலிபெருக்கி' நடைபயணம்

Added : செப் 10, 2021
Share
Advertisement
மதுரை-'மதுரை மாநகராட்சி பகுதி ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது, மக்கள் தவறாமல் செலுத்த வேண்டும் என' ஒலிபெருக்கியில் கொரோனா விழிப்புணர்வு வாசகங்கள் ஒலிக்க விட்டபடி மதுரை தெருக்களில் நடைபயணமாகசென்று சேவை செய்து வருகிறார் சமூக ஆர்வலர் இல.அமுதன்.அவர் கூறியதாவது: மாநகராட்சி பகுதிகளில் தினமும் எங்கெல்லாம் கொரோனா தடுப்பூசி முகாம்

மதுரை-'மதுரை மாநகராட்சி பகுதி ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது, மக்கள் தவறாமல் செலுத்த வேண்டும் என' ஒலிபெருக்கியில் கொரோனா விழிப்புணர்வு வாசகங்கள் ஒலிக்க விட்டபடி மதுரை தெருக்களில் நடைபயணமாகசென்று சேவை செய்து வருகிறார் சமூக ஆர்வலர் இல.அமுதன்.அவர் கூறியதாவது: மாநகராட்சி பகுதிகளில் தினமும் எங்கெல்லாம் கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த 20 நாட்களாக ஒலிபெருக்கியுடன் விழிப்புணர்வு அறிவிப்பு சேவையை செய்கிறேன். இன்னும் சிலருக்கு முன்பதிவின்றிதடுப்பூசி செலுத்தலாம் என்று தெரியாததால் அது குறித்தும் அறிவித்தப்படி நடக்கிறேன்.காலை நான் வசிக்கும் பேச்சியம்மன் படித்துறை, சிம்மக்கல் என குறைந்தது 5 கி.மீ., நடைபயணமாக செல்கிறேன். மாலை நண்பர்களின் டூவீலர்களில் எஸ்.எஸ்.காலனி, பைபாஸ் ரோடு, மாட்டுத்தாவணி, புதுார் என மக்கள் கூடும் இடங்களில் அறிவிப்பு செய்கிறேன். என் அறிவிப்பால் 18 வயதுக்கு மேற்பட்ட பலர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். மதுரை மக்களை எப்படியாவது 100 சதவீதம் தடுப்பூசி செலுத்த வைக்க வேண்டும் என்ற முயற்சியில் என்னால் முடிந்த அளவிற்கு பல பகுதிகளுக்கு பயணிக்கிறேன். இதோடு தெருவில் ஆதரவற்றோர் தென்பட்டால் குடை மற்றும்போர்வை தரும் சேவையும் செய்து வருகிறேன் என்றார்.- இவரை வாழ்த்த 75981 30411.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X