பொது செய்தி

தமிழ்நாடு

அனுமதித்த கோவில்களில் சதுர்த்தி விழா நடத்த களம்

Added : செப் 10, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம்:அரசு அனுமதியளித்த சிறிய கோவில்களில், விதிமுறைகளுக்கு உட்பட்டு, விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட, ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.கோவை புறநகர் பகுதிகளான துடியலுார், நரசிம்மநாயக்கன்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், வீரபாண்டி உட்பட பகுதிகளில் காவல்துறை அனுமதி அளித்த சிறிய கோவில்களில், விநாயகர் சிலைகளை வைத்து வழிபட இந்து அமைப்பினர் முடிவு

பெ.நா.பாளையம்:அரசு அனுமதியளித்த சிறிய கோவில்களில், விதிமுறைகளுக்கு உட்பட்டு, விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட, ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.கோவை புறநகர் பகுதிகளான துடியலுார், நரசிம்மநாயக்கன்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், வீரபாண்டி உட்பட பகுதிகளில் காவல்துறை அனுமதி அளித்த சிறிய கோவில்களில், விநாயகர் சிலைகளை வைத்து வழிபட இந்து அமைப்பினர் முடிவு செய்தனர்.துடியலுார் போலீஸ் ஸ்டேஷனில் விநாயகர் சதுர்த்தி விழா குறித்த ஆலோசனை கூட்டம், பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி., ராஜபாண்டியன், இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் ஆகியோர் தலைமையில் நடந்தது. அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு, சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை கோவில்களில் வைத்து வழிபடுவது என முடிவு செய்யப்பட்டது. இந்து சமய அறநிலை துறை மற்றும் வருவாய் துறைக்கு உட்பட்ட நிலங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்வது இல்லை எனவும், கோவில்களில் பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகள், தனி நபர்களாக நீர்நிலைகளில் கரைப்பது அல்லது இந்து சமய அறநிலையத் துறையிடம் ஒப்படைப்பது என முடிவு செய்யப்பட்டது. இந்து முன்னணி மாவட்ட பொது செயலாளர் தியாகராஜன், செய்தி தொடர்பாளர் ஜெய் கார்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X