பொது செய்தி

தமிழ்நாடு

டி.இ.ஓ.,க்கள் பயிற்சி வகுப்பு கல்வி கமிஷனர் ஆய்வு

Added : செப் 10, 2021
Share
Advertisement
மதுரை-கல்வித்துறையில் நேரடியாக தேர்வு செய்யப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான (டி.இ.ஓ.,க்கள்) பயிற்சி வகுப்பு மதுரையில் தனியார் நிறுவன அறக்கட்டளை கருத்தாளர்களால் நடத்தப்படுகிறது.மாநில அளவில் தேர்வு பெற்ற 20 பேருக்கு இப்பயிற்சி செப்.,6ல் துவங்கியது. நிறைவு நாளான நேற்று கல்வித்துறை கமிஷனர் நந்தகுமார் பார்வையிட்டார். பின் திருமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில்

மதுரை-கல்வித்துறையில் நேரடியாக தேர்வு செய்யப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான (டி.இ.ஓ.,க்கள்) பயிற்சி வகுப்பு மதுரையில் தனியார் நிறுவன அறக்கட்டளை கருத்தாளர்களால் நடத்தப்படுகிறது.மாநில அளவில் தேர்வு பெற்ற 20 பேருக்கு இப்பயிற்சி செப்.,6ல் துவங்கியது. நிறைவு நாளான நேற்று கல்வித்துறை கமிஷனர் நந்தகுமார் பார்வையிட்டார். பின் திருமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் அடிப்படை வசதிகள், மாணவர் கற்றல் திறன் குறித்து ஆய்வு செய்தார்.வரவேற்பை தவிர்த்த கமிஷனர்கமிஷனராக பதவியேற்ற பின் முதன் முறையாக நந்தகுமார் மதுரை வந்தார். மரியாதை நிமித்தமாக கல்வி அதிகாரிகள் அவரை வரவேற்க காத்திருந்தனர்.இத்தகவல் அறிந்த அவர் 'தன்னை யாரும் வரவேற்க வரவேண்டாம்.நேரத்தை வீணடிக்காமல் வழக்கமான பள்ளி ஆய்வு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளுங்கள்' என உத்தரவிட்டார். அதுபோல் அவர் ஆய்வு செய்த பள்ளியையும் அவரே தேர்வு செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X