பொது செய்தி

தமிழ்நாடு

வால்பாறையில் அரசு ஐ.டி.ஐ., துவக்க மக்கள் எதிர்பார்ப்பு

Added : செப் 10, 2021
Share
Advertisement
வால்பாறை:மாணவர்கள் எண்ணிக்கை சரிவால் மூடப்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளி கட்டடத்தில், மாணவர்களுக்கான தொழிற்கல்வி படிப்புகளை துவக்க வேண்டும் என முடீஸ் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொள்ளாச்சி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட வால்பாறையில் ஐந்து அரசு மேல்நிலைப்பள்ளி உட்பட மொத்தம், எட்டு மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இதில், முடீஸ் அரசு மேல்நிலைப்பள்ளி கடந்த, 1961ம் ஆண்டு

வால்பாறை:மாணவர்கள் எண்ணிக்கை சரிவால் மூடப்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளி கட்டடத்தில், மாணவர்களுக்கான தொழிற்கல்வி படிப்புகளை துவக்க வேண்டும் என முடீஸ் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொள்ளாச்சி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட வால்பாறையில் ஐந்து அரசு மேல்நிலைப்பள்ளி உட்பட மொத்தம், எட்டு மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இதில், முடீஸ் அரசு மேல்நிலைப்பள்ளி கடந்த, 1961ம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்தப்பள்ளியில் கடந்த, 2017-18ம் கல்வியாண்டில், 29 மாணவர்கள் படித்துவந்தனர்.பள்ளி வனப்பகுதியின் மத்தியில் இருப்பதாலும், வனவிலங்குகளின் தொல்லை அதிகமாக இருப்பதாலும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் சரிந்து கொண்டே வந்தது. மாணவர் எண்ணிக்கை சரிவால், இப்பள்ளி கடந்த கல்வியாண்டு துவக்கத்தில் மூடப்பட்டது.பள்ளியில் படித்த மாணவர்கள் வால்பாறை நகரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் சேர்ந்து படிக்கின்றனர். பள்ளியில் பணிபுரிந்த எட்டு ஆசிரியர்களும் வெவ்வேறு பள்ளிகளுக்கு பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.இதனிடையே அரசுக்கு சொந்தமான பள்ளி இடம் ஆக்கிரமிக்கப்படும் முன், தமிழக அரசு, அவ்விடத்தில், அரசு ஐ.டி.ஐ., அல்லது பாலிக்டெக்னிக் அமைக்க வேண்டும் என்பது ஒட்டு மொத்த மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.அப்பகுதி மக்கள் கூறுகையில், 'முடீஸ் அரசு மேல்நிலைப்பள்ளி ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. பள்ளி தற்போது மூடப்பட்டுள்ள நிலையில், காலியிடம் மற்றும் கட்டடத்தை, தமிழக அரசு கையகப்படுத்தி பள்ளியை சுற்றிலும் வேலி அமைக்க வேண்டும். இங்கு மாணவர்களின் நலன் கருதி ஐ.டி.ஐ., அல்லது பாலிடெக்னிக் (தொழிற்பயிற்சி மையம்) ஏற்படுத்தினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X