தமிழ்நாடு

பெரியார் பஸ் ஸ்டாண்ட் பணிகள் முடிய இன்னும் 14 நாட்களே உள்ளன

Added : செப் 10, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
மதுரை-மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 2019 ஜன., ஆரம்பித்த பெரியார் பஸ் ஸ்டாண்ட் மேம்பாட்டு பணிகள் 18 மாதங்களில் முடிக்க திட்டமிட்டுஇழுபறியில் உள்ளது. ஏற்கனவே 2020 மார்ச் 15ல் முடிப்பதாக கூறியும் முடியாத நிலையில் ஒரு மாதத்தில் முடியும் எனகடந்த ஆக., 26ல் அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த கெடு முடிய இன்னும் 14 நாட்களே உள்ள நிலையில் இம்முறையாவது நம்மூர் அதிகாரிகளின்
 பெரியார் பஸ் ஸ்டாண்ட் பணிகள் முடிய இன்னும் 14 நாட்களே உள்ளன

மதுரை-மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 2019 ஜன., ஆரம்பித்த பெரியார் பஸ் ஸ்டாண்ட் மேம்பாட்டு பணிகள் 18 மாதங்களில் முடிக்க திட்டமிட்டுஇழுபறியில் உள்ளது.

ஏற்கனவே 2020 மார்ச் 15ல் முடிப்பதாக கூறியும் முடியாத நிலையில் ஒரு மாதத்தில் முடியும் எனகடந்த ஆக., 26ல் அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த கெடு முடிய இன்னும் 14 நாட்களே உள்ள நிலையில் இம்முறையாவது நம்மூர் அதிகாரிகளின் 'ஸ்மார்ட்' பதில்கள் நிஜமாகுமா. பா.ஜ., மத்தியில் பொறுப்பேற்றபின் 2015ல் ஸ்மார்ட் சிட்டி அறிவிக்கப்பட்டு மதுரைக்கு ரூ.1,020 கோடியில் பலதிட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 2019 ஜன., ஆரம்பித்த பஸ் ஸ்டாண்ட் பணிகள் 18 மாதங்களில் முடிக்க திட்டமிட்டு இன்றும் நடக்கிறது.

புதிய பெரியார் பஸ் ஸ்டாண்ட், சுற்றுலா மையம், பழைய சென்ட்ரல் மார்க்கெட்டில் மல்டி லெவல் பார்க்கிங், புராதன சின்னம், வைகை பகுதி மேம்பாடு, ஜான்சிராணி பூங்காவில் வர்த்தக கூடம், குன்னத்துார் சத்திர கட்டுமானம், புராதன தலங்களுக்கு சாலை இணைப்பு, தமுக்கம் கலாச்சார மையம் உள்ளிட்ட பணிகள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடக்கிறது. ரூ.167.06 கோடியில் ஸ்மார்ட் பஸ் ஸ்டாண்ட்7.47 ஏக்கர் கொண்ட பெரியார், ஷாப்பிங் பஸ் ஸ்டாண்ட்டில் ரூ.167.06 கோடியில் மேம்பாட்டு பணி நடக்கிறது. 6 அடுக்குகளாக அமையும் பஸ் ஸ்டாண்டில் 57 பஸ்கள் நிறுத்தலாம். கீழ் தளத்தில் 250, தரை தளத்தில் 51, 1வது தளத்தில் 55, 2வது தளத்தில் 55, 3வது, 4வது தளத்தில் தலா 9 கடைகள் என மொத்தம் 429 கடைகள் அமைகிறது

. கீழ்தளம் 1ல் 371 கார்கள், கீழ்தளம் 2ல் 4865 டூவீலர்கள் பார்க்கிங் அமைகிறது.2வது, 3வது தளத்தில் வர்த்தக நிறுவனம், 4வது தளத்தில் உணவகம், விளையாட்டு கூடம், போலீஸ் ஸ்டேஷன், நேரக்கட்டுப்பாட்டு அறை, போக்குவரத்து நிர்வாக அலுவலகம், அவசர மருத்துவ பிரிவு, பொருட்கள் பாதுகாப்பு அறை, குழந்தைகளுக்கு பாலுாட்டும் அறை, பிரார்த்தனை கூடம், உணவகம், இணைய தளக்கூடம், ஏ.டி.எம்., பயணிகள் காத்திருப்பு அறை, எஸ்கலேட்டர், லிப்ட், சுகாதார வளாகம் அமைகிறது.2020 மார்ச் 15க்குள் பணிகள் முடிக்கப்படும்2019 ஜன., பெரியார் பஸ் ஸ்டாண்ட் இடிக்கப்பட்டும் இதுவரை பணி முடியவில்லை என கடந்தாண்டு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

அப்போது 'இதுவரை 80 சதவீத பணிகள் முடிந்துள்ளன. 2020 மார்ச் 15க்குள் பணிகள் முழுமையாக முடியும்' என மாநகராட்சி தெரிவித்தது. ஆனால் இதுவரை பணிகள் முடியவில்லை.ஒரு மாதத்தில் பணிகள் முடிக்கப்படும்பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் பணியில் முந்தைய அரசும், அதிகாரிகளும் பல குளறுபடி செய்துள்ளனர். 'ஆட்சி மாற்றத்திற்கு பின் மக்களுக்காக சில மாற்றங்கள் செய்துள்ளோம். பழைய பஸ் ஸ்டாண்டில் திட்டப்படி 50 பஸ்கள் தான் நிறுத்தலாம். தற்போது 57 பஸ்கள் நிறுத்தும் அளவு மாற்றியுள்ளோம். வணிக நோக்கில் அமைத்ததால் பஸ் எண்ணிக்கை அதிகமானால்நிறுத்த முடியாது. போக்குவரத்து நெரிசலை குறைக்க பஸ் ஸ்டாண்ட் பகுதி ஒரு வழிப் பாதையாகிறது.

மக்கள் பஸ் ஸ்டாண்டில் இருந்து ரயில்வே ஸ்டேஷன் செல்ல சுரங்க நடைபாதை அமைகிறது. இப்பணிகள் ஒரு மாதத்தில் முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு வரும்' என ஆக.,26ல் எம்.பி., சு.வெங்கடேசன், அதிகாரிகள் தெரிவித்தனர்.14 நாட்களே உள்ளனகடந்த ஆட்சியில் 2020 மார்ச் 15, இந்த ஆட்சியில் ஒரு மாதத்தில் முடியும் என ஆக.,26ல் மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதிகாரிகள் சொன்ன கெடு முடிய இன்னும் 14 நாட்களே உள்ள நிலையில் நேற்று ஆய்வு செய்த கமிஷனர் கார்த்திகேயன் பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களிடம் கூறியுள்ளனர்.

ஒவ்வொரு முறையும் அதிகாரிகள் இப்படி தான் சொல்கிறார்கள். ஆனால், பணிதான் இழுத்து கொண்டே செல்கிறது. இதற்கே இவ்வளவு ஆண்டுகளான நிலையில்ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பஸ் ஸ்டாண்ட் பணிகள் முடிய எத்தனை ஆண்டுகள் ஆகுமோ. அதிகாரிகளுக்கே வெளிச்சம்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தேசியமும் தெய்வீகமும் பெரியார் பேருந்து நிலையம் அல்ல கடந்த சில வருடங்களுக்கு முன்பு எம் சி ஆர் பேருந்து நிலையம் என மாற்றப்பட்டது
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
10-செப்-202109:12:23 IST Report Abuse
J.Isaac ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இந்தியா முழுவதும் மக்கள் வரிப்பணம் சீரழிக்கபடுகிறது. அரசியல்வாதிகளுக்கு நிரந்தர வருமானம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X