பொது செய்தி

தமிழ்நாடு

செய்திகள் சில வரிகளில்... சந்தையில் வாழைத்தார் விலை அதிகம்

Added : செப் 10, 2021
Share
Advertisement
பொள்ளாச்சியில், விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, பொது இடங்களில் சிலை வைக்க தடை இருந்தாலும், பொதுமக்கள் தனிப்பட்ட முறையில், சதுர்த்தி விழாவை பக்தி சிரத்தையோடு கொண்டாட முனைப்பாக உள்ளனர்.இதனால், பூஜை மற்றும் நைவேத்திய பொருட்களின் விற்பனையும், விலையும் அதிகரித்துள்ளது. பூஜைக்கு வாழைப்பழம் தேவை இருப்பதால், நேற்று முன்தினம், சந்தையில் வாழைத்தார் விற்பனை அமோகமாக
 செய்திகள் சில வரிகளில்... சந்தையில் வாழைத்தார் விலை அதிகம்

பொள்ளாச்சியில், விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, பொது இடங்களில் சிலை வைக்க தடை இருந்தாலும், பொதுமக்கள் தனிப்பட்ட முறையில், சதுர்த்தி விழாவை பக்தி சிரத்தையோடு கொண்டாட முனைப்பாக உள்ளனர்.இதனால், பூஜை மற்றும் நைவேத்திய பொருட்களின் விற்பனையும், விலையும் அதிகரித்துள்ளது. பூஜைக்கு வாழைப்பழம் தேவை இருப்பதால், நேற்று முன்தினம், சந்தையில் வாழைத்தார் விற்பனை அமோகமாக நடந்தது. இதில், செவ்வாழை கிலோ, 30 - 36 ரூபாய் விற்றது. கற்பூரவல்லி, 20 - 25; பூவன் 22 - 30; ரஸ்தாளி 25 - 30; நேந்திரன் 20 - 27; ரொபஸ்ட்ரா 12 - 17 ரூபாய்க்கு விற்பனையானது.

வியாபாரிகள் கூறுகையில், 'விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தேவை அதிகரித்துள்ளதால், அனைத்து ரகங்களுமே கடந்த வாரத்தை விட கிலோவுக்கு சராசரியாக, 5 ரூபாய் விலை உயர்ந்துள்ளது,' என்றனர்.

ஆராய்ச்சி மையத்தை காண வாய்ப்பு

உடுமலை கலிலியோ அறிவியல் கழகம், டி.ஒய்.ஏ.யு., சார்பில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில், வரும், 12ல், காரைக்குடியில் உள்ள மத்திய மின்வேதியியல் ஆய்வு மையத்தை 'ஆன்லைன்' வாயிலாக, காண்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தவிர, அன்றைய தினம், காலை, 11:00 முதல் பகல், 1:00 மணி வரை, ஆய்வு மைய முதன்மை விஞ்ஞானி சுதாகர், கலந்து கொள்கிறார். அவர், சி.எஸ்.ஐ.ஆர்., மற்றும் ஆய்வு மையத்தில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகள், தொழில்நுட்ப வளர்ச்சிகள் குறித்து விரிவாக எடுத்துரைக்க உள்ளார்.மேலும், மாணவர்கள், ஆசிரியர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கவும் உள்ளார். இந்நிகழ்வில் கலந்து கொள்வோருக்கு, சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன. விருப்பம் உள்ளவர்கள், https://forms.gle/a4ak4uumxzsoTokaA இணையதள முகவரியில், வரும், 11ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தகவல் அறிய, ஒருங்கிணைப்பாளரை 8778201926 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

மூலிகை நாற்றுகள் வினியோகம்

கோட்டூர் அரசு மருத்துவமனையில், மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின், ஒரு பகுதியாக, கோட்டூர் அரசு மருத்துவமனையில், நுாறு பெண்களுக்கு மலை வேம்பு மூலிகை நாற்றுகள் வழங்கப்பட்டன. தலைமை மருத்துவர் ராஜா தலைமை வகித்தார். சித்த மருத்துவர் வித்யாதேவி மற்றும் மருத்துவர் முருகபூபதி முன்னிலை வகித்தனர்.

சித்த மருத்துவர் வித்யாதேவி பேசியதாவது:மலைவேம்பு கஷாயம் வைத்துக்குடிக்கும் போது, பெண்களுக்கான கருத்தரிப்பு பிரச்னைகள், மாதவிடாய் மற்றும் கர்ப்பப்பை சார்ந்த அனைத்து பிரச்னைகளும் சரியாகும். வீடுகளில் இடமிருந்தால் கட்டாயம், மலைவேம்பு, ஆடாதொடை, நொச்சி, கருநொச்சி, எலுமிச்சை, முள்சீதா, அகத்தி, கலியாண முருங்கை உள்ளிட்ட மூலிகைகளை வளர்க்க வேண்டும். இவ்வாறு, பேசினார்.

பாதுகாப்புக்கு உதவும் 'செயலி!'

வால்பாறை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் ராபின்சன் தலைமை வகித்தார்.வால்பாறை இன்ஸ்பெக்டர் கற்பகம் பேசுகையில், ''பள்ளியில் படிக்கும் மாணவிகள், வீட்டிலும், வெளியிடங்களிலும் யாரேனும் தொந்தரவு செய்தால், உடனடியாக பெற்றோரிடம் கூறி, போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான பிரச்னைகள் குறித்து புகார் அளிப்பதற்கு வசதியாக காவல்துறை சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள, எஸ்.ஓ.எஸ்., செயலியை, மாணவிகள் அனைவரும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும்.

சமீபகாலமாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது; எனவே பள்ளி மாணவியர் மிகுந்த கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும். குழந்தை திருமணம், வரதட்சணை கொடுமை, பாலியல் ரீதியாக துன்புறுத்தல் உள்ளிட்ட பிரசனைகள் குறித்து பெண்கள், கட்டணமில்லா இலவச தொலைபேசி எண்கள், 181, 1098 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்,'' என்றார்.

நீர்த்தேக்கத்தொட்டியை திறக்க கோரிக்கை

மடத்துக்குளம் ஒன்றியம் மைவாடி ஊராட்சிக்கு உட்பட்ட ராஜாவூரில், 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய, பல நீராதாரங்களில் இருந்து குழாய்கள் அமைத்து, குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.மடத்துக்குளம் ஒன்றியப்பகுதியின் தரை மட்ட அளவில் ஒப்பிடும் போது, ராஜாவூர் பல மீட்டர் உயரத்தில் உள்ளது. இதனால் குழாய் வழியாக வழிந்தோடி வரும் நீர், இங்குள்ள மேல்நிலைத்தொட்டிகளில், முழுமையாக சேமிக்க முடிவதில்லை.

இந்நிலையில், ராஜாவூர் பகுதியில் புதிதாக தரைமட்ட நீர்த்தேக்கத்தொட்டி அதாவது சம்ப் அமைத்துள்ளது. பொதுமக்கள் கூறுகையில், 'கட்டுமான பணிகள் நிறைவடைந்த பின்பும், இந்த தரைமட்ட நீர்த்தேக்கத்தொட்டி பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் உள்ளது. இதனால், குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. இதற்கு தீர்வாக இந்த தொட்டியை பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும்' என்றனர்.பள்ளியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சிமடத்துக்குளம் பள்ளிகளில், தூய்மை நிகழ்வுகள்--2021 திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதில் பள்ளி வளாகங்களை சுத்தம் செய்வது, மரக்கன்று நடுவது முக்கிய பணியாக நடக்கிறது.இதன் ஒரு பகுதியாக காரத்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது. தலைமையாசிரியர் சவுந்தரராஜன் மற்றும் இதர ஆசிரியர்கள் பங்கேற்றனர். பள்ளி வளாகம் மற்றும் அருகிலுள்ள பகுதியில், நுாற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில், பங்கேற்ற ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

பாலத்தில் ஓடுதளம் சேதம்

பொள்ளாச்சி மாக்கினாம்பட்டி - சோளபாளையம் இணைப்பு ரோட்டில், ரயில்வே பால ஓடுதளம் சிதைந்துள்ளதால், கிராமவாசிகள் சிரமத்துக்குள்ளாகின்றனர்.பொள்ளாச்சி, மாக்கினாம்பட்டி - சோளபாளையம் இணைப்பு ரோட்டில், பொள்ளாச்சி - திண்டுக்கல் ரயில் பாதை குறுக்கிடுகிறது. ரயில் பாதையை கடந்து செல்ல, தண்டவாளத்துக்கு கீழே தாழ்வான பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தில், மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படும் பிரச்னை பல ஆண்டுகளாக உள்ளது.

அது மட்டுமின்றி, ஒன்றிய எல்லைக்குட்பட்ட ரோடுகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நிலையில், ரயில்வே எல்லைக்குட்பட்ட பாலத்தின் ஓடுதளம் கான்கிரீட்டால் அமைக்கப்பட்டிருந்தது. அப்பகுதி மட்டும் சிதைந்து, மோசமான நிலையில் காணப்படுகிறது. அவ்வழியே செல்லும் வாகனங்களை இந்த ஓடுதளம் பல்லாங்குழி ஆடுவதால், சுற்றுப்பகுதி கிராமவாசிகள் சிரமத்துக்குள்ளாகின்றனர். ஓடுதளத்தை சீரமைக்க, திண்டுக்கல் கோட்ட ரயில்வே நிர்வாகம் முன்வர வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X