ஒன்றிய அலுவலகத்தில் கடைகள் சட்டத்திற்கு புறம்பாக ஏலம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஒன்றிய அலுவலகத்தில் கடைகள் சட்டத்திற்கு புறம்பாக ஏலம்

Added : செப் 10, 2021
Share
உசிலம்பட்டி---உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 9 கடைகள் சட்டத்திற்கு புறம்பாக ஏலம் விடப்பட்டது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இந்த கடைகளுக்கு முறைப்படி ஏல அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஏலம் எடுக்க 24 பேர் டி.டி., எடுத்து வந்து ஒப்பந்த படிவம் கொடுக்க வந்தனர். அலுவலக நேரம் முடிந்த பின் வாங்க முடியாது,

உசிலம்பட்டி---உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 9 கடைகள் சட்டத்திற்கு புறம்பாக ஏலம் விடப்பட்டது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இந்த கடைகளுக்கு முறைப்படி ஏல அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஏலம் எடுக்க 24 பேர் டி.டி., எடுத்து வந்து ஒப்பந்த படிவம் கொடுக்க வந்தனர். அலுவலக நேரம் முடிந்த பின் வாங்க முடியாது, திங்கள் காலையில் தருமாறு அதிகாரிகள் கூறியுள்ளனர். நாங்கள் அலுவலகத்திற்குள் முன்னதாக வந்து விட்டோம், எங்களிடம் படிவங்களை வாங்க வேண்டும் என கூறி பாரதிய பா.பி., தலைவர் முருகன்ஜி தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர், அதிகாரிகள் திங்கள் மாலை வரை நேரம் இருப்பதால் அன்று வந்து கொடுங்கள் என சமாதானம் செய்து அனுப்பினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X