பொது செய்தி

தமிழ்நாடு

கொண்டைக்கடலை சாகுபடி செய்ய ஊக்கம்! உணவு பாதுகாப்பு இயக்கத்தில் திட்டம்

Added : செப் 10, 2021
Share
Advertisement
நெகமம்;கொண்டைக்கடலை சாகுபடியை தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் பயிரிட்டு, கூடுதல் மகசூல் பெறலாம் என, கிணத்துக்கடவு வட்டார வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்தார்.கிணத்துக்கடவு ஒன்றியம், காட்டம்பட்டி, தாசநாயக்கன்பாளையம், காட்டம்பட்டிபுதுார், ஜக்கார்பாளையம் கிராமங்களில் கொண்டைக்கடலை சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. இச்சாகுபடியாளர்களுக்கு, உயர் சாகுபடி

நெகமம்;கொண்டைக்கடலை சாகுபடியை தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் பயிரிட்டு, கூடுதல் மகசூல் பெறலாம் என, கிணத்துக்கடவு வட்டார வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்தார்.கிணத்துக்கடவு ஒன்றியம், காட்டம்பட்டி, தாசநாயக்கன்பாளையம், காட்டம்பட்டிபுதுார், ஜக்கார்பாளையம் கிராமங்களில் கொண்டைக்கடலை சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. இச்சாகுபடியாளர்களுக்கு, உயர் சாகுபடி தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம், ஒருங்கிணைந்த உர நிர்வாகம், பயிர் எண்ணிக்கையை பராமரிப்பு, இலைவழி ஊட்டச்சத்து தெளித்தல் மற்றும் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் நிர்வாகம் போன்ற தொழில்நுட்பங்கள் குறித்து, வேளாண்துறை வாயிலாக விழிப்புணர்வும் அளிக்கப்படுகிறது.கொண்டைக்கடலை விதைப்பு புரட்டாசி பட்டத்தில் மேற்கொள்ளப்படுகிறது. இரண்டரை ஏக்கருக்கு, 70 - 75 கிலோ விதை தேவைப்படுகிறது. செடிகளுக்கு இடையே, 10 செ.மீ., இடைவெளி இருக்கும் வகையில் விதைப்பு இருக்க வேண்டும்.முன்னதாக, நிலத்தை, 3 - 4 முறை புழுதி பட உழவு செய்து, விதைகளை ரைசோபில் - 200 கிராம் அல்லது பாஸ்போ பாக்டீரியா - 200 கிராமை, அரிசி கஞ்சியுடன் சேர்த்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.விதைப்புக்கு பின், 20 - 30 நாட்களில் கைகளை கொண்டு களை நிர்வாகம் செய்ய வேண்டும். இரண்டரை ஏக்கருக்கு, 12.5 டன் தொழு உரம் இட வேண்டும். கடைசி உழவின்போது, தழை, சாம்பல் சத்தினையும் அதே அளவில் இடவேண்டும்.அரசு வழங்கும் நுண்ணுாட்ட கலவையை, இரண்டரை ஏக்கருக்கு, 5 கிலோ என்ற அளவில் இடும்போது, மகசூல் அதிகரிக்கிறது.இந்நிலங்களில் நீர் தேங்கக்கூடாது. டி.ஏ.பி., கரைசலை பூக்கும்போதும், காய்க்கும்போதும் தெளிக்க வேண்டும்.இதனை தொடர்ந்து, 85 - 90 நாட்களில் காய்கள் முற்றிய பின் அறுவடை செய்ய வேண்டும். ஒருங்கிணைந்த முறையில், பயிரிடுவதன் வாயிலாக, இரண்டரை ஏக்கருக்கு, 1,000 - 1,150 கிலோ வரை மகசூல் பெறலாம். எனவே, கொண்டைக்கடலையை தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் பயிரிட்டு பயனடையலாம் என, கிணத்துக்கடவு வட்டார வேளாண் உதவி இயக்குனர் அனந்தகுமார் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X