தமிழ்நாடு

ரத்த தானம் வழங்கினால் உடல் ஆரோக்கியம் மேம்படும்

Added : செப் 10, 2021
Share
Advertisement
தேனி-''நம் உடலில் உள்ள ஒரே திரவ உறுப்பு ரத்தம் மட்டுமே 'நீரின்றி அமையாது உலகு' என்பதைப் போல, ரத்தமின்றி இயங்காது மனித உடல். உடல் ஆரோக்கியமாகவும், வாழ்நாளை அதிகரிக்கவும் ஆண்டில் ஒருமுறையாவது ரத்ததானம் வழங்க வேண்டும்.” என்கிறார் தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவ அலுவலர் டாக்டர் பி.பிரியா தெரிவித்துள்ளார்.தேனி மருத்துவக்கல்லுாரி

தேனி-''நம் உடலில் உள்ள ஒரே திரவ உறுப்பு ரத்தம் மட்டுமே 'நீரின்றி அமையாது உலகு' என்பதைப் போல, ரத்தமின்றி இயங்காது மனித உடல். உடல் ஆரோக்கியமாகவும், வாழ்நாளை அதிகரிக்கவும் ஆண்டில் ஒருமுறையாவது ரத்ததானம் வழங்க வேண்டும்.” என்கிறார் தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவ அலுவலர் டாக்டர் பி.பிரியா தெரிவித்துள்ளார்.

தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை ரத்தவங்கி 2004 முதல் இயங்குகிறது. இதில்1200 யூனிட் ரத்தம் பாதுகாக்க முடியும். இங்கு 2 டாக்டர்கள், 3 தொழில் நுட்பாளர்கள், நர்ஸ்கள் உள்ளனர். ரத்த வங்கியின் சேவை, பயன்பாடுகள் பற்றி அவர் கூறியதாவது: ரத்த வகைகள் எத்தனை'ஏ' பாசிட்டிவ், நெகட்டிவ். 'பி' பாசிட்டிவ், நெகட்டிவ்.'ஓ' பாசிட்டிவ், நெகட்டிவ்.

பாம்பே 'ஓ' என்ற அரிய வகைகள் ரத்தம், வெவ்வேறுபட்ட உடல் மரபனுக்களுக்கு ஏற்ப வகைகள் உள்ளன.ரத்த தானத்தின் அவசியம்ஆண்டிற்கு ஒரு முறையாவது ரத்ததானம் கொடுக்க வேண்டும். ஏனெனில் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கொழுப்பு அதிகரிப்பு, மாரடைப்பு, புற்றுநோய்களில் இருந்து காப்பாற்றி, வாழ்நாளை அதிகரித்து உடலை சீராக வைத்துக் கொள்ளலாம். டாக்டர்களால் பரிந்துரைந்தவர்கள் வழங்க வேண்டும். ஆரோக்கியத்திற்கு அதிக பங்காற்றும் சிவப்பணுக்கள் ரத்ததானம் வழங்கி 24 மணி நேரத்தில் ஊறி விடும். இதனால் ஆரோக்கியமாக உடல் உறுப்புக்கள் பணிகளை மேற்கொள்ளும். ஆரோக்கியம் பன்மடங்கு அதிகரிக்கும். ஆரோக்கியமான திடமான உடல்நிலை உள்ளளோர்3 மாதத்திற்கு ஒரு முறையும் வழங்கலாம்.

யார் ரத்த தானம் வழங்கலாம்

ரத்தத்தில் இரும்புச் சத்து 12.5 மி.கி.,சதவீதத்திற்கு மேல் உள்ளவர்கள், 18 முதல் 65 வயது வரை, 45 கிலோ எடைக்கு மேல் உள்ளவர்கள் ரத்ததானம் வழங்கலாம். கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் டாக்டர்கள் பரிந்துரையில் 14 நாட்கள் கழித்து ரத்த தானம் வழங்கலாம். கொரோனா பாதிப்பில் சிகிச்சை பெற்றவர்கள் குணமடைந்து, மீண்டும் சளி, உமிழ்நீர் பரிசோதனையில் பாதிப்பு இல்லை என உறுதி செய்து 28 நாட்கள் கழித்து ரத்ததானம் வழங்கலாம். பெண்கள் மாதவிடாய் முடிந்து 10 நாட்கள் கழித்து வழங்கலாம். நோயாளிகள் வழங்க வேண்டாம்யார் வழங்கக்கூடாதுபாரம்பரிய நாள்பட்ட நோய்கள், தோல் நோயாளிகள், நீண்ட நாள் 'ஸ்டிராய்டு' மருந்து எடுப்பவர்கள், ரத்தப் புற்றுநோய், பால்வினை நோய், வலிப்பு, மலேரியா, காசநோய், மஞ்சள் காமாலை, எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவர்கள் ரத்ததானம் வழங்க தகுதியில்லை. தற்காலிக காய்ச்சல், சளி, இருமல் உள்ளவர்கள், கருவுற்ற பெண், பாலுாட்டும் தாய்மார்கள், கரு கலைந்து சிகிச்சையில் உள்ளோர் ஓராண்டு ரத்ததானம் வழங்கக்கூடாது.வழங்குவதற்கு முன், பின் கடைபிடிக்க வேண்டியவைஉணவு உண்டு 30 நிமிடங்களுக்கு பின் வழங்கலாம். வெறும் வயிற்றில் ரத்ததானம் வழங்கக்கூடாது.

முந்தைய நாட்களில் ஆஸ்பிரின், தோல்நோய், மனநோய் மாத்திரைகள் எடுத்திருக்கக்கூடாது. பதட்டம் கூடாது. வழங்குவதற்கு 24 மணி நேரத்திற்குள் மது அருந்தியிருக்கக்கூடாது. தண்ணீர், பழச்சாறு பருகுவது நல்ல பயன்தரும். தானத்திற்கு பின் அரைமணி நேரத்திற்குள் புகை பிடிக்கக்கூடாது. 3 மணி நேரத்திற்கு கடின வேலை கூடாது.ரத்தத்தின் பயன்பாடுகள்45 கிலோவிற்கு மேல் உள்ளவரிடம் 350 மில்லி, 55 கிலோவிற்கு மேல் உள்ளவரிடம் 450 மி.கி.,பெறுகிறோம். இருபாலருக்கும் பொறுந்தும். 90 சதவீதம் முகாம்களிலும்,10 சதவீதம் மருத்துவக்கல்லுாரி சார்பிலும் ரத்ததானம் வழங்கப்படுகிறது.

இதை 35 நாட்கள் மட்டுமே பதப்படுத்தும் தொழில்நுட்பத்தில் பாதுகாக்க முடியும். ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள், தட்டையணுக்கள் பிரித்து பாதுகாப்போம். மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு மாதம் 11 ஆயிரம் யூனிட் வழங்குகிறோம். அதிகளவு பிரசவத்தில் ரத்தபோக்கு ஏற்படுபவர்களுக்கு வழங்கப்படும். டெங்கு பாதித்தவர்களுக்கு தட்டையணுக்களின் அளவு 20 ஆயிரத்திற்கும் குறையும் போது பாதிப்பு அதிகரிக்கும். சராசரி அளவு 1.5 லட்சம் முதல் 3 லட்சம் இருக்க வேண்டும். அது குறையும் போது டெங்கு பாதிப்பு அதிகரித்து உடல்நிலை பாதிக்கும். உயிர் காக்க தட்டையனுக்களை வழங்கி பல உயிர்களை காப்பாற்றி உள்ளோம்

.விழிப்புணர்வுஆண்டுதோறும் உலக ரத்த கொடையாளர்கள் தினம் ஜூன் 14, முகாம் ஒருங்கிணைப்பாளர் தினம் அக்டோபர் 1 ல் கொண்டாடப்படுகிறது. அன்று பள்ளி, கல்லுாரிகளில் விழிப்புணர்வு நடத்துகிறோம். என்.எஸ்.எஸ்., திட்ட ஒருங்கிணைப்பாளர்களுடன் தொடர்பு கொண்டு, 'மெகா' நிகழ்வுகளை நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X