பொது செய்தி

தமிழ்நாடு

இளநிலை பாடப்பிரிவுகளில் 63 காலியிடம்

Added : செப் 10, 2021
Share
Advertisement
உடுமலை:உடுமலை அரசு கலைக்கல்லுாரியில், 2021-22ம் கல்வியாண்டின், இளநிலைப்பாடப்பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கை நடந்தது. கலை, அறிவியல், மற்றும் வணிகவியல் துறைகளில், மொத்தம், 864 இடங்கள் இருந்தன. அவற்றில், முதற்கட்டமாக நடந்த கலந்தாய்வு வாயிலாக, 765 இடங்கள் பூர்த்தி செய்யப்பட்டன.பின், தமிழ் மற்றும் ஆங்கில இலக்கியப் பாடங்களுக்கு, கலந்தாய்வு நடந்தது. அதில், இளங்கலை தமிழ் இலக்கியப்

உடுமலை:உடுமலை அரசு கலைக்கல்லுாரியில், 2021-22ம் கல்வியாண்டின், இளநிலைப்பாடப்பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கை நடந்தது. கலை, அறிவியல், மற்றும் வணிகவியல் துறைகளில், மொத்தம், 864 இடங்கள் இருந்தன. அவற்றில், முதற்கட்டமாக நடந்த கலந்தாய்வு வாயிலாக, 765 இடங்கள் பூர்த்தி செய்யப்பட்டன.பின், தமிழ் மற்றும் ஆங்கில இலக்கியப் பாடங்களுக்கு, கலந்தாய்வு நடந்தது. அதில், இளங்கலை தமிழ் இலக்கியப் பாடப்பிரிவில், 19 மாணவர்களும், ஆங்கில இலக்கிய பாடப்பிரிவில், 17 மாணவர்களும் சேர்ந்தனர்.இந்நிலையில், காலியாக உள்ள, 63 இடங்களை நிரப்ப, கல்லுாரியில் நேரடி விண்ணப்பங்கள் வழங்கப்படவுள்ளன.கல்லுாரி முதல்வர் கல்யாணி கூறியதாவது: காலியாக உள்ள இளநிலை அறிவியல் பாடப்பிரிவுகளில் சேர மிகவும் பிற்பட்ட வன்னியர் இனப்பிரிவைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.அதேபோல், வணிகவியல் பாடப்பிரிவுகளுக்கு, பிளஸ் 2 வகுப்பில் தொழிற்கல்விப்பிரிவில் பயின்ற அனைத்து மாணவ, மாணவியரும் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்கள், வரும், 13ம் தேதியில் முதல் கல்லுாரியில் நேரடியாக பெற்றுக்கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, வரும், 16ம் தேதிக்குள், கல்லுாரியில் சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X