தமிழ்நாடு

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம்சேதமடைந்த ஓட்டுச்சாவடிகளை மாற்ற வாய்ப்பு

Added : செப் 10, 2021
Share
Advertisement
தேனி-தேனி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு, சுருக்க திருத்த பணி நடைபெறுவதால் புதிய வாக்காளர் சேர விண்ணப்பிக்கலாம் கலெக்டர் முரளீதரன் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: தேர்தல் ஆணைய உத்தரவின்படி சிறப்பு சுருக்க திருத்த பணியை வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடு, வீடாக ஆய்வு செய்கின்றனர். ஓட்டுச்சாவடிகள் மறுசீரமைக்கும் பணியும் நடக்கிறது. இதில் ஓட்டுச்சாவடிக்கு 1500

தேனி-தேனி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு, சுருக்க திருத்த பணி நடைபெறுவதால் புதிய வாக்காளர் சேர விண்ணப்பிக்கலாம் கலெக்டர் முரளீதரன் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: தேர்தல் ஆணைய உத்தரவின்படி சிறப்பு சுருக்க திருத்த பணியை வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடு, வீடாக ஆய்வு செய்கின்றனர். ஓட்டுச்சாவடிகள் மறுசீரமைக்கும் பணியும் நடக்கிறது. இதில் ஓட்டுச்சாவடிக்கு 1500 மேல் வாக்காளர்கள் இருப்பின் அவை 2 ஆக பிரிக்கப்படும். ஓட்டுச்சாவடி கட்டடம் சிதிலமடைந்து இருந்தாலும், 2 கி.மீ., துாரத்திற்கு மேல் ஓட்டுச்சாவடி அமைந்திருந்தால் மாற்ற வேண்டும். அனைத்து ஓட்டுச்சாவடிகளையும் தனி அலுவலர்கள் ஆய்வு செய்து வரும்13ல் வரைவு ஓட்டுச்சாவடி பட்டியல் வெளியிடப்படும். இதில் ஆட்சேபைனை இருந்தால் செப். 20ம் தேதிக்குள் வாக்குபதிவு அலுவலரிடம் மனு அளிக்கலாம். மனு ஆய்வு செய்து தேர்தல் ஆணைய ஒப்புதல் பெற்று வெளியிடப்படும். ஓட்டுச்சாவடி அடிப்படையில் வரைவு வாக்காளர் பட்டியல் 2021 நவ.1ல் வெளியிடப்படும்.இதைத்தொடர்ந்து 2022 ஜன.,1ல் தகுதி நாளாக கொண்டு 18 வயது பூர்த்தியானவர்கள் வாக்காளர் பட்டியலில் சேர விண்ணப்பிக்கலாம். புதிய வாக்களர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, நேரிலோ அல்லது www.nvsp.in என்ற இணையதளம் வழியாகவோ விண்ணப்பிக்கலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X