அரசு அலுவலகங்களில் குரங்கு ஜாலியாக வலம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அரசு அலுவலகங்களில் குரங்கு 'ஜாலி'யாக வலம்

Added : செப் 10, 2021
Share
பொள்ளாச்சி:பொள்ளாச்சியின் முக்கிய அரசு அலுவலக வளாகங்களில் வலம் வரும் குரங்கு ஒன்று, அங்குள்ள மரம் மற்றும் மாடியை தனது புகலிடமாக மாற்றிக் கொண்டுள்ளது.பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகம், பி.எஸ்.என்.எல்., அலுவலகம் மற்றும் தாலுகா அலுவலகம் ஆகியவை அடுத்தடுத்து அமைந்துள்ளன. இந்த வளாகங்களில், மரங்கள் கூட்டமாக நிறைந்துள்ளன. இந்நிலையில், சமீபகாலமாக குரங்கு ஒன்று இந்த
 அரசு அலுவலகங்களில் குரங்கு 'ஜாலி'யாக வலம்

பொள்ளாச்சி:பொள்ளாச்சியின் முக்கிய அரசு அலுவலக வளாகங்களில் வலம் வரும் குரங்கு ஒன்று, அங்குள்ள மரம் மற்றும் மாடியை தனது புகலிடமாக மாற்றிக் கொண்டுள்ளது.பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகம், பி.எஸ்.என்.எல்., அலுவலகம் மற்றும் தாலுகா அலுவலகம் ஆகியவை அடுத்தடுத்து அமைந்துள்ளன. இந்த வளாகங்களில், மரங்கள் கூட்டமாக நிறைந்துள்ளன. இந்நிலையில், சமீபகாலமாக குரங்கு ஒன்று இந்த வளாகங்களில் சர்வசாதாரணமாக வலம் வருகிறது.பசிக்கும் போது வெளியில் வந்து, அருகில் உள்ள ரோட்டோர பழக்கடைகளில் இருந்து பழங்களை துாக்கிக் கொண்டு ஓடி விடுகிறது. விரட்டுவோரை, பற்களை காட்டி, சீறி பயமுறுத்துகிறது. இதனால், அப்பகுதி வியாபாரிகள், அரசு அலுவலக பணியாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.குரங்குகள் வாயிலாக, மனிதர்களுக்கு, 'ரேபிஸ்' வைரஸ் தாக்கும் வாய்ப்பு அதிகமுள்ளதால், குரங்கை அங்கிருந்து மீட்டு, வனப்பகுதிக்குள் விட, வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X