பொது செய்தி

தமிழ்நாடு

பாலம் கட்டுமான பணியால் சிரமம்: விரைவாக முடிக்க எதிர்பார்ப்பு

Added : செப் 10, 2021
Share
Advertisement
கிணத்துக்கடவு:நெகமம் - கோவில்பாளையம் ரோட்டில், பாலம் கட்டுமான பணிகளை விரைவாக முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர வலியுறுத்தப்பட்டுள்ளது.கோவில்பாளையம் - நெகமம் வரையிலான ரோடு, விரைவில், விரிவுபடுத்தப்படுகிறது. இதற்காக, நெடுஞ்சாலைத்துறையினர் ரோடு அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதன்காரணமாக, கோவில்பாளையம் அடுத்த, செங்குட்டுபாளையம் ரோடு, நெகமம் ரோடு
 பாலம் கட்டுமான பணியால் சிரமம்: விரைவாக முடிக்க எதிர்பார்ப்பு

கிணத்துக்கடவு:நெகமம் - கோவில்பாளையம் ரோட்டில், பாலம் கட்டுமான பணிகளை விரைவாக முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர வலியுறுத்தப்பட்டுள்ளது.கோவில்பாளையம் - நெகமம் வரையிலான ரோடு, விரைவில், விரிவுபடுத்தப்படுகிறது. இதற்காக, நெடுஞ்சாலைத்துறையினர் ரோடு அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதன்காரணமாக, கோவில்பாளையம் அடுத்த, செங்குட்டுபாளையம் ரோடு, நெகமம் ரோடு சந்திப்பில், பாலம் அமைக்கும் பணி துவங்கியுள்ளது.கடந்த ஒரு மாதத்துக்கு முன், பாலம் அமைப்பதற்காக ரோட்டின் குறுக்கே பள்ளம் தோண்டும் பணி துவங்கி, சமீபத்தில் நிறைவு பெற்றது. நேற்று, கான்கிரீட் தளம் அமைக்கும் பணி துவங்கியது. இதனால், கடந்த ஒரு மாதமாக, நெகமம் செல்லும் வாகனங்களும், நெகமத்தில் இருந்து, கோவை - பொள்ளாச்சி ரோட்டுக்கு வரும் வாகனங்களும் காணியாலம்பாளையம் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது.இரு சக்கர வானங்கள் மற்றும் கார்கள் முஸ்லிம் கோவில்பாளையத்தில் உள்ள குறுகலான வீதிகளுக்குள் நுழைந்து, மீண்டும் நெகமம் ரோட்டை சென்றடைகின்றன. ஒருவழிப்பாதையான காணியாலம்பாளையம் வழியாக, நெகமம் சுற்றுப்பகுதி கிராமங்களுக்கு செல்லும் பஸ் மற்றும் தேங்காய், தேங்காய் மட்டை லோடுடன், லாரிகள் சிரமத்துடன் சென்று வருகின்றன. எனவே, பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடித்து, கோவில்பாளையம் - நெகமம் ரோட்டை வாகனங்களுக்கு திறந்து விட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X