அயோத்தியில் ஓ.பி.சி., மாநாடு; உ.பி., தேர்தலுக்கு பா.ஜ., தயார்

Updated : செப் 10, 2021 | Added : செப் 10, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
உ.பி., சட்டசபைத் தேர்தலில் மிக முக்கியமாக கருதப்படும், ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் ஓட்டுகளை வளைப்பதற்காக, அயோத்தியில் அடுத்த வாரம் ஓ.பி.சி., மாநாட்டை நடத்த பா.ஜ., திட்டமிட்டுள்ளது.உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது.தேசிய அரசியலின் போக்கையே நிர்ணயிக்கும் வல்லமை படைத்த உ.பி.,யில் அடுத்த ஆண்டு துவக்கத்தில்

உ.பி., சட்டசபைத் தேர்தலில் மிக முக்கியமாக கருதப்படும், ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் ஓட்டுகளை வளைப்பதற்காக, அயோத்தியில் அடுத்த வாரம் ஓ.பி.சி., மாநாட்டை நடத்த பா.ஜ., திட்டமிட்டுள்ளது.



latest tamil news


உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது.தேசிய அரசியலின் போக்கையே நிர்ணயிக்கும் வல்லமை படைத்த உ.பி.,யில் அடுத்த ஆண்டு துவக்கத்தில் சட்டசபைத் தேர்தல் நடக்கவுள்ளது. நாட்டின் மிகப்பெரிய மாநிலமான இங்கு ஆட்சியை கைப்பற்றினால்தான் பா.ஜ.,வால் அடுத்த தேர்தலில் மத்தியிலும் ஆட்சியை கைப்பற்ற முடியும்.அங்கு 50 சதவீதத்துக்கும் மேல் ஓ.பி.சி., வகுப்பினரின் ஓட்டுகள் இருப்பதால், அவற்றை கைப்பற்றுவதில் முக்கிய அரசியல் கட்சிகளிடம் போட்டி நிலவும்.

இந்த வகுப்பில் பெருவாரியாக உள்ள யாதவ சமூக ஓட்டுகளை சமாஜ்வாதி வைத்துள்ளது.இதனால் யாதவர் சமூகம் தவிர்த்து, பிற ஓ.பி.சி., சமூகத்தினர்தான் பா.ஜ.,வின் குறியாக உள்ளது.உ.பி., சட்டசபைத் தேர்தலை மனதில் வைத்துத் தான், சில மாதங்களுக்கு முன் நடந்த மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் அனுபிரியா படேல், பங்கஜ் சவுத்ரி என யாதவர் அல்லாத ஓ.பி.சி., சமூகங்களைச் சேர்ந்த பலர் அமைச்சர்களாக்கப் பட்டனர்.


latest tamil news


இந்நிலையில் தான் மற்றொரு வியூகமாக ஓ.பி.சி., மாநாட்டை, உ.பி., மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக நடத்த பா.ஜ., மேலிடம் திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் மதுரை எப்படியோ அதுபோல உ.பி.,யில், அயோத்தியை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நகரம் என கருதுவதுண்டு.மாயாவதி, ஓவைசி போன்ற தலைவர்கள் தங்கள் பேரணி மற்றும் மாநாட்டிற்கு, இந்த நகரத்தையே தேர்வு செய்வர்.

இதே பாணியில் பா.ஜ.,வின் ஓ.பி.சி., மாநாடு அடுத்த வாரம் 18ல் அயோத்தியில் நடக்கஉள்ளது.இதைத் தொடர்ந்து, உ.பி.,யில் உள்ள 75 மாவட்டங்களில் இதுபோன்ற மாநாடு மற்றும் கருத்தரங்குகளை, முழுவீச்சில் நடத்த பா.ஜ., மேலிடம் திட்டமிட்டு உள்ளது.

- நமது டில்லி நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
10-செப்-202121:48:47 IST Report Abuse
அப்புசாமி ராமர் என்ன ஓ.பி.சி யா? அயோத்தியில் எதுக்கு மாநாடு?
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
10-செப்-202115:02:05 IST Report Abuse
Vena Suna வாக்குகள் பெற மக்களை பிரித்து வாழும் காட்சிகள் ஒழியட்டும். ஆங்கிலேயன் ஆட்சி வரட்டும்.
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
10-செப்-202114:32:49 IST Report Abuse
Pugazh V அவாளுக்கு நெத்தியடிச்சாப்ல ஆயிடுத்து, பாவம். என்ன பேஷறது இப்போ? பாஜக அப்படியாக்கும் இப்படியாக்கும் உருட்டிண்டிருந்தா. ஆனா.பாஜகவும் ஓபிசி மாநாடு கூட்டி வேற ஜாதிகளப் பிரதானப்படுத்தறாளே???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X