வனத்துக்குள் திருப்பூர்: அழகாகும் நிலங்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'வனத்துக்குள் திருப்பூர்': அழகாகும் நிலங்கள்

Added : செப் 10, 2021
Share
உடுமலை:உடுமலை பகுதிகளில், வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில், 30 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டது.மாவட்டத்தை பசுமையாக்கும் வகையில், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆறு திட்டங்களின் கீழ், 10.50 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்ட நிலையில், 7 வது திட்டத்தின் கீழ், 2 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் தீவிரமாக நடந்து
 'வனத்துக்குள் திருப்பூர்': அழகாகும் நிலங்கள்

உடுமலை:உடுமலை பகுதிகளில், வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில், 30 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டது.மாவட்டத்தை பசுமையாக்கும் வகையில், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆறு திட்டங்களின் கீழ், 10.50 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்ட நிலையில், 7 வது திட்டத்தின் கீழ், 2 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மாவட்டத்தில், இதுவரை, 78 ஆயிரத்து, 425 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.உடுமலை பகுதிகளில், விவசாயிகள், தொழில் நிறுவனங்கள், கோழிப்பண்ணைகள் மற்றும் ஊராட்சி நிர்வாகங்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். தென்மேற்கு பருவ மழையும் திருப்தியாக பெய்து வருவதால், மரக்கன்றுகள் நடும் பணி தீவிரமடைந்துள்ளது. உடுமலை பகுதிகளில், நேற்று வரை, 30 ஆயிரத்து, 364 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதோடு, நுாற்றுக்கும் மேற்பட்ட நிலங்களில் நடவு செய்ய பதிவுகள் செய்யப்பட்டுள்ளது. டிச., இறுதிக்குள், இலக்கை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.நேற்று, வாளவாடி அருகிலுள்ள, பாப்பனுாத்து, விவசாயி குருசாமிக்கு சொந்தமான நிலத்தில், தேக்கு, தான்றி என, 152 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. அதே போல், செல்லப்பம்பாளையம், விவசாயி ராமகிருஷ்ணனுக்கு சொந்தமான நிலத்தில், தேக்கு, வன்னி, அத்தி என, 176 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.இத்திட்டத்தின் கீழ், பாதுகாப்பான விவசாய நிலங்கள் மற்றும் பொது இடங்களில் மரக்கன்றுகள் இலவசமாக நடவு செய்து பராமரிக்க விருப்பம் உள்ளவர்கள், 90474 56666 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என திட்டக்குழுவினர் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X