சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோர்ட் வளாகத்தில் தற்கொலை முயற்சி

Added : செப் 10, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி கோர்ட் வளாகத்தில், பழைய குற்றவாளி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.கோவை மாவட்டம், பொள்ளாச்சி ஜே.எம்., 2 கோர்ட் முன், நேற்று மாலை, 3:00 மணிக்கு, மதுபோதையில் வந்த நபர், 'துாக்கு தண்டனை கொடுங்க' என கத்தினார். போலீசார், அவரை அறிவுறுத்தி வெளியே செல்லுமாறு கூறினர். ஆனால், அந்நபர் வேப்ப மரத்தின் மீது ஏறி, துண்டை கட்டி துாக்கு போட
 கோர்ட் வளாகத்தில் தற்கொலை முயற்சி

பொள்ளாச்சி:பொள்ளாச்சி கோர்ட் வளாகத்தில், பழைய குற்றவாளி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.கோவை மாவட்டம், பொள்ளாச்சி ஜே.எம்., 2 கோர்ட் முன், நேற்று மாலை, 3:00 மணிக்கு, மதுபோதையில் வந்த நபர், 'துாக்கு தண்டனை கொடுங்க' என கத்தினார். போலீசார், அவரை அறிவுறுத்தி வெளியே செல்லுமாறு கூறினர். ஆனால், அந்நபர் வேப்ப மரத்தின் மீது ஏறி, துண்டை கட்டி துாக்கு போட முயன்றார்.போலீசார், தீயணைப்பு வீரர்கள் மரத்துக்கு கீழே வலை விரித்தனர். பின், தீயணைப்பு வீரர்கள் மரத்தின் மீது ஏறி அந்த நபரை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பொள்ளாச்சி கிழக்கு போலீசார் கூறுகையில், 'கோட்டூர் மலையாண்டிப்பட்டணத்தை சேர்ந்த மணிகண்டன்,35, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் ஜெயிலில் இருந்து வெளியே வந்துள்ளார். நேற்று மது போதையில் தற்கொலை செய்ய முயன்றார். விசாரணை நடக்கிறது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
10-செப்-202107:28:52 IST Report Abuse
Ram Pollachi வாழ வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு மரணம் மிக அருகில் வருகிறது, சாக வேண்டும் என்பவர்களுக்கு மரணம் எட்டாகனி....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X