சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருப்பூரில் தம்பதியிடம் ரூ.10 லட்சம் பறிப்பு

Added : செப் 10, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூரில், பைக்கில் வந்த தம்பதியிடம் 10 லட்சம் ரூபாய் பறித்து சென்ற மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.திருப்பூர், காங்கயம் ரோடு முத்தண்ணம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமநாதன், 40; தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி தேன்மொழி. இடம் கிரயம் செய்வதற்காக, நேற்று பைக்கில் இருவரும் நெருப்பெரிச்சல் பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு, 10.5 லட்சம் ரூபாயை பையில் வைத்து

திருப்பூர்:திருப்பூரில், பைக்கில் வந்த தம்பதியிடம் 10 லட்சம் ரூபாய் பறித்து சென்ற மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.திருப்பூர், காங்கயம் ரோடு முத்தண்ணம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமநாதன், 40; தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி தேன்மொழி. இடம் கிரயம் செய்வதற்காக, நேற்று பைக்கில் இருவரும் நெருப்பெரிச்சல் பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு, 10.5 லட்சம் ரூபாயை பையில் வைத்து எடுத்துச் சென்றனர்.அங்கு பத்திரப்பதிவு பணி முழுமை பெறாததால், பதிவு செய்ய முடியவில்லை. பைக்கில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். பைக் கேத்தம்பாளையம் அருகே வந்தபோது, பின்தொடர்ந்து வந்த மர்ம நபர், தேன்மொழி கையில் வைத்திருந்த பணப்பையை பறித்துவிட்டு தப்பினார்.அனுப்பர்பாளையம் போலீசார், 'சிசிடிவி' கேமராவை ஆய்வு செய்து, மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X