தமிழகத்தில் தயாரித்த நீராவி இன்ஜின்: குன்னூரில் சோதனை ஓட்டம்| Dinamalar

தமிழ்நாடு

தமிழகத்தில் தயாரித்த நீராவி இன்ஜின்: குன்னூரில் சோதனை ஓட்டம்

Added : செப் 10, 2021 | கருத்துகள் (1)
Share
குன்னுார்;தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட நிலக்கரி நீராவி இன்ஜின் சோதனை ஓட்டம் நேற்று குன்னுாரில் நடந்தது.நாட்டிலேயே முதல்முறையாக, 'எக்ஸ் கிளாஸ்' நிலக்கரி நீராவி இன்ஜின், 8.9 கோடி ரூபாய் மதிப்பில், திருச்சி பொன்மலை ரயில்வே தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டது. நேற்று மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னுாருக்கு, இரு பெட்டிகளுடன் சோதனை ஓட்டம் நடந்தது.பொன்மலை பணிமலை
 தமிழகத்தில் தயாரித்த நீராவி இன்ஜின்: குன்னூரில் சோதனை ஓட்டம்

குன்னுார்;தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட நிலக்கரி நீராவி இன்ஜின் சோதனை ஓட்டம் நேற்று குன்னுாரில் நடந்தது.நாட்டிலேயே முதல்முறையாக, 'எக்ஸ் கிளாஸ்' நிலக்கரி நீராவி இன்ஜின், 8.9 கோடி ரூபாய் மதிப்பில், திருச்சி பொன்மலை ரயில்வே தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டது. நேற்று மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னுாருக்கு, இரு பெட்டிகளுடன் சோதனை ஓட்டம் நடந்தது.பொன்மலை பணிமலை தொழிற்சாலை உதவி மேலாளர் (பணி) சுப்ரமணியம் தலைமையில் ஊழியர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.இன்ஜின் குன்னுார் வந்தடைந்தபோது, அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.மலை ரயில் ரத அறக்கட்டளை நிறுவனர் நடராஜன் கூறுகையில்,''சுவிட்சர்லாந்தில் தயாரிக்கப்பட்ட பாரம்பரிய இன்ஜினை போன்று, தமிழகத்தில் தயாரித்த எக்ஸ் கிளாஸ் நிலக்கரி நீராவி இன்ஜின் பெருமை அளிக்கிறது. விரைவில் சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்கு வரும்,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X