பொது செய்தி

தமிழ்நாடு

கோடநாடு வழக்கில் கைதியிடம் விசாரிக்க மனு

Added : செப் 10, 2021
Share
Advertisement
ஊட்டி:கோடநாடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வாளையார் மனோஜிடம் விசாரிக்க தனிப்படை போலீசார் அனுமதி கோரி, சிறை நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளனர்.நீலகிரி மாவட்டம், கோத்தகிரி கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு, ஊட்டி செஷன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் அரசு தரப்பில் கூடுதல் விசாரணைக்கு கோர்ட் அனுமதி அளித்ததால், தேவைப்படும் நபர்களுக்கு சம்மன் அனுப்பி போலீசார்

ஊட்டி:கோடநாடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வாளையார் மனோஜிடம் விசாரிக்க தனிப்படை போலீசார் அனுமதி கோரி, சிறை நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளனர்.நீலகிரி மாவட்டம், கோத்தகிரி கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு, ஊட்டி செஷன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் அரசு தரப்பில் கூடுதல் விசாரணைக்கு கோர்ட் அனுமதி அளித்ததால், தேவைப்படும் நபர்களுக்கு சம்மன் அனுப்பி போலீசார் விசாரித்து வருகின்றனர். வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இரண்டாவது நபரான வாளையார் மனோஜ் குன்னுார் கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரிடம் விசாரிக்க தனிப்படை போலீசார் குன்னுார் கிளை சிறை அதிகாரிக்கு அனுமதி கோரி மனு அளித்துள்ளனர். ஓரிரு நாளில் வாளையார் மனோஜிடம் விசாரணை நடத்த உள்ளனர்.கோவை, செப். 10-

'இ.எம்.ஐ., தள்ளி வைப்பதாக வரும் அழைப்புகளை நம்பி ஏமாற வேண்டாம்' என, சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.வங்கிக்கணக்கு வைத்திருப்போரின் ஓ.டி.பி., எண்களை பெற்று, பணம் திருடப்படுவது தொடர்கதையாகி வருகிறது.தற்போது புதிய நடைமுறையாக வங்கிகளில் வீடு, தனிநபர் கடன் பெற்றவர்களை குறிவைத்து மோசடி கும்பல் செயல்பட்டு வருகிறது.கடன் பெற்றவர்களுக்கு போன் செய்யும் மோசடி கும்பல், மூன்று மாதம் கடனுக்கான தவணைத் தொகையை தள்ளுபடி செய்வதாகவும், அதற்காக மொபைல் எண்ணுக்கு வரும் ஓ.டி.பி.,யை தருமாறும் போன் செய்கிறது. இதை உண்மை என, நம்பி, ஓ.டி.பி.,யை கொடுத் தால், அடுத்த சில மணி நேரங்களில் வங்கிக்கணக்கில் உள்ள பணம் முழுவதும் திருடப்படுகிறது.சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், 'எக்காரணத்தை கொண்டும் வங்கிக்கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல்போன் எண்ணுக்கு வரும்ஓ.டி.பி., மற்றும் 'பின்' எண்களை பிறருடன் பகிரக்கூடாது. விழிப்புடன் இருந் தால், பணம் திருடப்படுவதை தவிர்க்கலாம்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X