பொது செய்தி

தமிழ்நாடு

துாய்மை பணியாளரின் நேர்மை

Added : செப் 10, 2021
Share
Advertisement
அடையாறு : சாலையில் கிடந்த, 50 ஆயிரம் ரூபாய் பணப்பையை மீட்டு, உரியவரிடம் ஒப்படைத்த மாநகராட்சி துாய்மை பெண் ஊழியருக்கு, பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். அடையாறு மண்டலம், 175வது வார்டு துாய்மை ஊழியர் பழனியம்மாள், 40. நேற்று முன்தினம், அடையாறு, கஸ்துாரிபாய்நகர் 7வது தெருவை சுத்தம் செய்து கொண்டிருந்தார்.அப்போது, சாலையில் ஒரு பை கிடந்தது. அதில், 50 ஆயிரம் ரூபாய் இருந்தது. உடனே,
 துாய்மை பணியாளரின் நேர்மை

அடையாறு : சாலையில் கிடந்த, 50 ஆயிரம் ரூபாய் பணப்பையை மீட்டு, உரியவரிடம் ஒப்படைத்த மாநகராட்சி துாய்மை பெண் ஊழியருக்கு, பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

அடையாறு மண்டலம், 175வது வார்டு துாய்மை ஊழியர் பழனியம்மாள், 40. நேற்று முன்தினம், அடையாறு, கஸ்துாரிபாய்நகர் 7வது தெருவை சுத்தம் செய்து கொண்டிருந்தார்.அப்போது, சாலையில் ஒரு பை கிடந்தது. அதில், 50 ஆயிரம் ரூபாய் இருந்தது. உடனே, ஒப்பந்த நிறுவன அதிகாரிகளை அழைத்து பணப்பை குறித்து கூறினார்.

சிறிது நேரத்தில், அதே பகுதியை சேர்ந்த ரோஸ்லெட்மேரி என்ற பெண், தொலைத்த பையை சாலையில் தேடினார்.இதை பார்த்த பழனியம்மாள், பையின் அடையாளத்தை கேட்டார். சரியாக கூறியதும், பணப்பையை ரோஸ்லெட் மேரியிடம் கொடுத்தார்.இவர், வங்கியில் இருந்து பணத்துடன் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியபோது, பையை சாலையில் தொலைத்தது தெரிந்தது.

தன்னலம் கருதாமல், சாலையில் கிடந்த பணப்பையை மீட்டு, உரியவரிடம் ஒப்படைத்த பழனியம்மாளின் நற்குணத்தை, ரோஸ்லெட்மேரி குடும்பத்தார் மற்றும் ஒப்பந்த நிறுவன அதிகாரிகள் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X