வீட்டின் பூட்டை உடைத்து 67 சவரன் நகை திருட்டு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீட்டின் பூட்டை உடைத்து 67 சவரன் நகை திருட்டு

Added : செப் 10, 2021
Share
பூந்தமல்லி : பூந்தமல்லி அருகே, மருத்துவர் வீட்டின் பூட்டை உடைத்து 67 சவரன் நகை 20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றனர். பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கம், கோபுரச நல்லுார், ஐஸ்வர்யா கார்டன் பகுதியை சேர்ந்தவர் மனோஜ் பிரபாகர் 31. மருத்துவர். அவரது மனைவியும் மருத்துவர். நேற்று முன்தினம், மனோஜ் பிரபாகருக்கு பிறந்த நாள். இதை கொண்டாடுவதற்காக, வீட்டை பூட்டி

பூந்தமல்லி : பூந்தமல்லி அருகே, மருத்துவர் வீட்டின் பூட்டை உடைத்து 67 சவரன் நகை 20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கம், கோபுரச நல்லுார், ஐஸ்வர்யா கார்டன் பகுதியை சேர்ந்தவர் மனோஜ் பிரபாகர் 31. மருத்துவர். அவரது மனைவியும் மருத்துவர். நேற்று முன்தினம், மனோஜ் பிரபாகருக்கு பிறந்த நாள். இதை கொண்டாடுவதற்காக, வீட்டை பூட்டி விட்டு, குடும்பத்தினருடன் அடையாறு சென்றனர்.பிறந்த நாளை கொண்டாடிவிட்டு, நள்ளிரவு வீட்டிற்கு திரும்பினர்.

அப்போது, வீட்டில் இருந்த பொருட்கள் எல்லாம் சிதறி கிடந்தன. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள், மாடிக்கு சென்று பார்த்தபோது, மாடி வீட்டின் கதவை உடைத்து, உள்ளே புகுந்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்த, 67 சவரன் நகைகள் 20 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து, பூந்தமல்லி போலீசார் வழக்கு பதிந்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சி பதிவு மூலம் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X