சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மருத்துவர் வீட்டில் 67 சவரன் திருட்டு

Added : செப் 10, 2021
Share
Advertisement
பூந்தமல்லி : பூந்தமல்லி அருகே, மருத்துவர் வீட்டில் 67 சவரன் நகை உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றனர். பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கம், கோபுரச நல்லுார், ஐஸ்வர்யா கார்டன் பகுதியை சேர்ந்தவர் மனோஜ் பிரபாகர், 31; மருத்துவர்.நேற்று முன்தினம், மனோஜ் பிரபாகருக்கு பிறந்த நாள். இதை கொண்டாடுவதற்காக, குடும்பத்தினருடன் அடையாறு சென்றனர்; நள்ளிரவு வீடு திரும்பினர். அப்போது,

பூந்தமல்லி : பூந்தமல்லி அருகே, மருத்துவர் வீட்டில் 67 சவரன் நகை உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கம், கோபுரச நல்லுார், ஐஸ்வர்யா கார்டன் பகுதியை சேர்ந்தவர் மனோஜ் பிரபாகர், 31; மருத்துவர்.நேற்று முன்தினம், மனோஜ் பிரபாகருக்கு பிறந்த நாள். இதை கொண்டாடுவதற்காக, குடும்பத்தினருடன் அடையாறு சென்றனர்; நள்ளிரவு வீடு திரும்பினர். அப்போது, வீட்டில் இருந்த பொருட்கள் எல்லாம் சிதறி கிடந்தன.

மாடிக்கு சென்று பார்த்தபோது, மாடி வீட்டின் கதவை உடைத்து, உள்ளே புகுந்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்த, 67 சவரன் நகைகள், 20 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை திருடி சென்றது தெரியவந்தது.இது குறித்து, பூந்தமல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X