குன்றத்துார் : குன்றத்துார் ரேஷன் கடையில், எலி தொல்லையால், ரேஷன் பொருட்கள் நாசமாகி, வீணாவதாக புகார் எழுந்துள்ளது.
குன்றத்துாரில், காவல் நிலையம் பின்புறத்தில், பெரிய தெரு- 2 என்ற ரேஷன் கடை இயங்கி வருகிறது. 703 கார்டுகள் கொண்ட இந்த கடை, நீண்ட நாட்களாக, சிறிய வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது.இதனால், பொருட்கள் வைப்பதற்கும், வாடிக்கையாளர்கள் நிற்பதற்கும் போதிய இடவசதி இல்லை. அதே நேரத்தில், எலி தொல்லை அதிகமாக இருப்பதால், அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற பொருட்கள் நாசமாகின்றன.
ஒவ்வொரு நாளும், ஏகப்பட்ட பொருட்கள் வீணாவதாக புகார் எழுந்துள்ளது. அதே போல், ரேஷன் கடைக்கு சொந்த கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இருந்து வருகிறது. பிரச்னையின் முக்கியத்துவம் கருதி, ரேஷன் பொருட்கள் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE