சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரயில்வே குடியிருப்பில் காவலர் மர்ம மரணம்

Added : செப் 10, 2021
Share
Advertisement
ஐ.சி.எப் : ரயில்வே குடியிருப்பில், மர்மமான முறையில் இறந்து கிடந்த காவலரின் உடலை மீட்டு, போலீசார் விசாரிக்கின்றனர்.சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜேஸ் குமார் 37; ரயில்வே காவலர். இவர், ஐ.சி.எப்., ரயில்வே குடியிருப்பில், தன் குடும்பத்துடன் வசித்து வந்தார்.கடந்த, ஐந்து நாட்களுக்கு முன், தலைமை காவலர் பதவி உயர்வுக்காக திருச்சியில் நடந்த பயிற்சிக்கு சென்றார். அப்போது,

ஐ.சி.எப் : ரயில்வே குடியிருப்பில், மர்மமான முறையில் இறந்து கிடந்த காவலரின் உடலை மீட்டு, போலீசார் விசாரிக்கின்றனர்.

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜேஸ் குமார் 37; ரயில்வே காவலர். இவர், ஐ.சி.எப்., ரயில்வே குடியிருப்பில், தன் குடும்பத்துடன் வசித்து வந்தார்.கடந்த, ஐந்து நாட்களுக்கு முன், தலைமை காவலர் பதவி உயர்வுக்காக திருச்சியில் நடந்த பயிற்சிக்கு சென்றார். அப்போது, மதுபோதையில் அதிகாரிகளுடன், தகராறில் ஈடுபட்டதால், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.பின், சென்னை திரும்பியவுடன், மனைவி சசிகலாவுடன் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் சசிகலா கோபமடைந்து, தாய் வீட்டிற்கு சென்றார்.

இந்நிலையில், நேற்று காலை குடியிருப்பிற்கு அருகே, ராஜேஸ் குமார் மூக்கிலிருந்து ரத்தம் வழிந்த நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. ஐ.சி.எப்., போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X