நீர்க்காகம் வேட்டை இருவருக்கு காப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நீர்க்காகம் வேட்டை இருவருக்கு 'காப்பு'

Added : செப் 10, 2021
Share
தாம்பரம் : நீர்க்காகங்களை வேட்டையாடிய இருவரை, தாம்பரம் வனத்துறை அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.தாம்பரம் வனச்சரகத்திற்கு உட்பட்ட, மதுரபாக்கம், அகரம் தென் பெரிய ஏரி மற்றும் அதை சுற்றியுள்ள காட்டு பகுதிகளில், சில தினங்களாக, துப்பாக்கி சுடும் சத்தம் கேட்பதாக, வனத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன.இதையடுத்து, வனத்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட பகுதிகளில் தேடுதல்

தாம்பரம் : நீர்க்காகங்களை வேட்டையாடிய இருவரை, தாம்பரம் வனத்துறை அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.

தாம்பரம் வனச்சரகத்திற்கு உட்பட்ட, மதுரபாக்கம், அகரம் தென் பெரிய ஏரி மற்றும் அதை சுற்றியுள்ள காட்டு பகுதிகளில், சில தினங்களாக, துப்பாக்கி சுடும் சத்தம் கேட்பதாக, வனத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன.இதையடுத்து, வனத்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். நேற்று முன்தினம் மாலை, ஏரிக்கரை பகுதியில், நாட்டு துப்பாக்கிகளுடன் இருவர் சுற்றித் திரிவதை கண்டனர்.

அவர்களை பிடித்து விசாரித்ததில், இருவரும் அகரம்தென் அடுத்த மப்பேடு பகுதியைச் சேர்ந்த கிரிமணி, 35, சுமன், 21 என, தெரிந்தது. நரிக்குறவர்களான இவர்கள், கொரோனாவால் வேலையின்றி, நீர்க்காகங்களை வேட்டையாடி வந்ததாக, வனத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.இருவரையும் நேற்று காலை கைது செய்த வனத்துறையினர், அவர்கள் வேட்டையாடி வைத்திருந்த நீர்க்காகங்களின் உடல்கள், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X