சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாலையில் திடீர் பள்ளம்; வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

Added : செப் 10, 2021
Share
Advertisement
ஆழ்வார்பேட்டை : காவேரி மருத்துவமனை அருகே டி.டி.கே., சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.தேனாம்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட, ஆழ்வார்பேட்டையில், டி.டி.கே., சாலை உள்ளது. இச்சாலையில் காவேரி மருத்துவமனை அருகே, திடீர் பள்ளம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர். தகவல் அறிந்து வந்த, மயிலாப்பூர் போக்குவரத்து போலீசார், விபத்து
 சாலையில் திடீர் பள்ளம்; வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

ஆழ்வார்பேட்டை : காவேரி மருத்துவமனை அருகே டி.டி.கே., சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

தேனாம்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட, ஆழ்வார்பேட்டையில், டி.டி.கே., சாலை உள்ளது. இச்சாலையில் காவேரி மருத்துவமனை அருகே, திடீர் பள்ளம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர். தகவல் அறிந்து வந்த, மயிலாப்பூர் போக்குவரத்து போலீசார், விபத்து ஏற்படாதபடி, போக்குவரத்தை சீர் செய்தனர்.

பின் சம்பவ இடத்திற்கு வந்த குடிநீர் வாரிய அதிகாரிகள், பள்ளம் ஏற்பட்டதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்தனர்.இதில், கழிவுநீர் குழாயில் ஏற்பட்ட விரிசல் காரணமாக சாலையில் பள்ளம் விழுந்தது தெரிய வந்தது. தொடர்ந்து பள்ளம் சீரமைப்பதற்கான நடவடிக்கையில், வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X