தமிழ்நாடு

சென்னையில் சுவர் விளம்பரங்களுக்கு முற்றுப்புள்ளி! 1.37 லட்சம் 'போஸ்டர்'கள் அகற்றம்

Added : செப் 10, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னையை அழகு படுத்தும் வகையில், மாநகர எல்லைக்குள் விதிமீறி ஒட்டப்பட்டிருந்த, 1.37 லட்சம், 'போஸ்டர்'கள், 892 பேனர்கள் அகற்றப்பட்டுள்ளன. சுவர் விளம்பரங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, வண்ண ஓவியங்களால் அழகுபடுத்தும் பணி தீவிர கதியில் நடந்து வருகிறது. நாட்டின் முக்கிய மெட்ரோ நகரங்களில் ஒன்றான சென்னையை, சர்வதேச தரத்திற்கு மேம்படுத்த, பல்வேறு நடவடிக்கைகள்
சென்னையில் சுவர் விளம்பரங்களுக்கு முற்றுப்புள்ளி! 1.37 லட்சம் 'போஸ்டர்'கள் அகற்றம்

சென்னையை அழகு படுத்தும் வகையில், மாநகர எல்லைக்குள் விதிமீறி ஒட்டப்பட்டிருந்த, 1.37 லட்சம், 'போஸ்டர்'கள், 892 பேனர்கள் அகற்றப்பட்டுள்ளன. சுவர் விளம்பரங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, வண்ண ஓவியங்களால் அழகுபடுத்தும் பணி தீவிர கதியில் நடந்து வருகிறது.

நாட்டின் முக்கிய மெட்ரோ நகரங்களில் ஒன்றான சென்னையை, சர்வதேச தரத்திற்கு மேம்படுத்த, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தென் மாநிலங்களின் தலைநகர் என அழைக்கப்படும் அளவுக்கு, பல்வேறு துறைகளிலும் சென்னை வளர்ச்சி அடைந்துள்ளது. சர்வதேச நிறுவனங்கள் பல, இங்கு கிளை திறந்துள்ள நிலையில், நாட்டின் மிகப் பெரிய மென்பொருள், வன்பொருள் மற்றும் உற்பத்தி நிறுவனங்களின் தலைமை அலுவலகங்களும் சென்னையை மையமாக வைத்து செயல்படுகின்றன.

உலகின் இரண்டாவது மிகப்பெரிய கடற்கரையான மெரினா கடற்கரை இங்கு உள்ளது. வரலாற்று ரீதியாகவும், சென்னைக்கு பல்வேறு சிறப்பம்சங்கள் இருந்தாலும், அரசியல் கட்சிகளின் ஓவியங்கள், போஸ்டர்கள், பேனர்களால், மாநகர் பொலிவிழந்து காணப்பட்டது. மேலும், பேனர்கள் மற்றும் போஸ்டர்களால், வானக ஓட்டிகளுக்கு கவனச்சிதறல் ஏற்பட்டு, விபத்துகள் ஏற்பட்டன. ராட்சத பேனர்கள் விழுந்து, உயிரிழப்பும் ஏற்பட்டது. இதையடுத்து, சென்னையின் அழகை மீட்டெடுக்கவும், விபத்துக்களை தடுக்கவும், மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு அதிகரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக, சென்னையில், பொது இடங்கள் மற்றும் தனியார் சுவர்களில் ஒட்டப்படிருந்த போஸ்டர்களை அகற்ற, மாநகராட்சி கமிஷனர் ககன் தீப் சிங் பேடி உத்தரவிட்டார். அதே போல், விதிமீறிய பேனர்களை அகற்றும் நடவடிக்கையும் துரிதப்படுத்தப்பட்டது. அந்த வகையில், சென்னையில் ஒட்டப்பட்டிருந்த, ஒரு லட்சத்து, 37 ஆயிரத்து 267 போஸ்டர்கள், 892 பேனர்கள் அகற்றப்பட்டன. இதை தொடர்ந்து, மெட்ரோ ரயில் பாலங்கள், மாநில நெடுஞ்சாலைகள், மாநகராட்சி பாலங்கள், சாலைகள் மற்றும் பூங்காக்களில், வண்ண ஓவியங்கள் வரையும் பணி துவங்கி நடந்து வருகிறது.

மாநகரின் முக்கிய பகுதிகளான விமானம் நிலையம் முதல் கத்திப்பாரா சந்திப்பு வரை, கோயம்பேடு மேம்பாலம், அண்ணா மேம்பாலம், மெரினா கடற்கரை, மெட்ரோ ரயில் நிலைய துாண்கள், திருமங்கலம் மேம்பாலங்கள் அழப்படுத்தும் பணிகள் துவங்கியுள்ளன. இவ்விடங்களில், வண்ண ஓவியங்கள் வரைதல், மரம், செடிகளை நட்டு பசுமையாக பராமரித்தல், வண்ண ஒளிரும் விளக்குகளால் அழகு படுத்துதல், முக்கிய சந்திப்புகளில் செயற்கை நீரூற்றுகளை உருவாக்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதே போல், 15 மண்டலங்களிலும் 55 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டு, சென்னையின் பசுமை பரப்பை விரிவுபடுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இதன் மூலம், சென்னையில், போஸ்டர், பேனர் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தடையை மீறி, போஸ்டர், பேனர் வைப்போர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.

இதுகுறித்து, சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி கூறியதாவது:சென்னையை அழகு படுத்தும் பணி தீவிர கதியில் நடந்து வருகிறது. இப்பணிகள் குறித்து, 15 நாட்களுக்கு ஒருமுறை வட்டார மற்றும் மண்டல அதிகாரிகளுடன் ஆலோசித்து வருகிறேன். அதன்படி, ஒவ்வொரு வார்டுகளிலும் குறைந்தது, ஐந்து இடங்களை கண்டறிந்து, வண்ண ஓவியங்கள் வரைய வேண்டும். ஒவ்வொரு பகுதியிலும், 500 மரக்கன்றுகளை நட வேண்டும் என, அறிவுறுத்தி உள்ளேன். இதுபோன்று, பல்வேறு இடங்களில் பணிகள் நடந்து வருகின்றன. இதன் மூலம், சென்னை மீண்டும் பொலிவு பெறும். சர்வதேச நகரங்களுக்கு இணையாக ஜொலிப்பதை பொதுமக்கள் விரைவில் காணலாம். இவ்வாறு அவர் கூறினார்.


புகார் அளிக்கலாம்


சென்னையில், விதிகளை மீறி, மீண்டும் போஸ்டர் ஓட்டினாலோ, பேனர்கள் வைத்தலோ, சுவர் விளம்பரம் செய்தாலோ, சம்பந்தப்படுபவர்கள் மீது, காவல்துறையின் வாயிலாக நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற விதிமீறல்கள் குறித்து, 1913 என்ற எண்ணில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.


முதல்வர், உதயநிதிக்கு விலக்கு?


சென்னையில், அரசியல் கட்சிகள் சார்ந்த அனைவரின் சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டு, வண்ண ஓவியங்கள் வரைப்பட்டுள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது மகன் உதயநிதி படம் வரைப்பட்ட சுவர் ஓவியங்கள் நீக்கப்படவில்லை. அவர்களின் புகைப்படங்கள் அடங்கிய சுவர் ஓவியங்களை அகற்ற, மாநகராட்சி அதிகாரிகள் தயக்கம் காட்டி வருவதாக புகார் எழுந்துள்ளது. முதல்வர், அரசியல் கட்சித் தலைவர் என்ற எவ்வித பாரபட்சமும் பாராமல், அதிகாரிகள் தங்கள் நடவடிக்கையை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என, பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
10-செப்-202122:02:24 IST Report Abuse
அப்புசாமி அப்பாடா... இனிமே தளபதி அழைக்கிறார்... இடைப்பாடியார் அழைக்கிறார்... கேப்டன் அழைக்கிறார்னு எழுதி டென்சன் பண்ணமாட்டாங்களா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X