பொது செய்தி

தமிழ்நாடு

அணுகுசாலையில் ஆக்கிரமிப்பு அதிகரிப்பு; உயிர் பலியை தடுக்க நடவடிக்கை பாயுமா?

Added : செப் 10, 2021
Share
Advertisement
திருவொற்றியூர் : எண்ணுார் விரைவு சாலையின் அணுகு சாலையில் பெருகி வரும் ஆக்கிரமிப்புகளால், உயிர் பலி ஏற்படுவதால், உடனடியாக அவற்றை அகற்ற வேண்டுமென கோரிக்கை வலுத்துள்ளது.எண்ணுார் விரைவு சாலையில், சுங்கச்சாவடி சந்திப்பு முதல் தாங்கல் - தியாகராயபுரம் வரையிலான இரு பக்க அணுகு சாலையிலும் ஆட்டோ பழுது பார்ப்பு, மரக்கடைகள், மீன், உணவகங்கள், பெட்டிக் கடைகள் என, ஆக்கிரமிப்புகள்
 அணுகுசாலையில் ஆக்கிரமிப்பு அதிகரிப்பு; உயிர் பலியை தடுக்க நடவடிக்கை பாயுமா?

திருவொற்றியூர் : எண்ணுார் விரைவு சாலையின் அணுகு சாலையில் பெருகி வரும் ஆக்கிரமிப்புகளால், உயிர் பலி ஏற்படுவதால், உடனடியாக அவற்றை அகற்ற வேண்டுமென கோரிக்கை வலுத்துள்ளது.

எண்ணுார் விரைவு சாலையில், சுங்கச்சாவடி சந்திப்பு முதல் தாங்கல் - தியாகராயபுரம் வரையிலான இரு பக்க அணுகு சாலையிலும் ஆட்டோ பழுது பார்ப்பு, மரக்கடைகள், மீன், உணவகங்கள், பெட்டிக் கடைகள் என, ஆக்கிரமிப்புகள் பெருகிஉள்ளன.தாங்கல் - தியாகராயபுரத்தை ஒட்டிய அணுகுசாலை முற்றிலும் தெரியாத அளவிற்கு, வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.

இதனால், சமீபத்தில் அவ்வழியே நடந்து சென்ற மூதாட்டி சுந்தரி, 60, என்பவர், கன்டெய்னர் லாரி மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.இதுபோன்று, இப்பகுதிகளில் அடிக்கடி உயிரிழப்பு சம்பவம் சர்வ சாதாரணமாக அரங்கேறுகிறது. அதனால், உயிர் பலிக்கு காரணமாக, அணுகுசாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கை வலுத்துள்ளது.

இது குறித்து, நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:எண்ணுார் விரைவு சாலையின் அணுகு சாலையில் பெருகி வரும் ஆக்கிரமிப்புகளால், போக்குவரத்து நெரிசல், உயிர் பலி ஏற்படுவது உண்மை தான். நாங்கள் பலமுறை எச்சரித்துள்ளோம்.இருப்பினும், ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியவில்லை. நிலைமை கைமீறி விட்டது. எனினும், ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X